புதுச்சேரி மாநில தி.மு.க.,வில் கடும் அதிருப்தி : சரிக்கட்ட அறிவாலயத்தில் கருணாநிதி பஞ்சாயத்து

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: புதுச்சேரி மாநில, தி.மு.க., அதிருப்தியாளர்களை சரிக்கட்டவும், உள்ளாட்சித்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தவும், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில், இம்மாதம் 9ம் தேதி, சென்னை அறிவாலயத்தில், அம்மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

சமீபத்தில், புதுச்சேரி மாநில தி.மு.க., அமைப்பாளர் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்தால் முன்னாள் மாநில அமைப்பாளர் ஜானகிராமன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிலர், கடும் அதிருப்தி அடைந்தனர். அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4, 8, 10 ஆகிய தேதிகளில், மூன்று கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில், புதுச்சேரி நகராட்சியை கைப்பற்ற, தி.மு.க., திட்டமிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கும், 2014ம் ஆண்டின் லோக்சபா தேர்தல் பணிகளுக்கும் நிர்வாகிகள், தொண்டர்களை தயார்படுத்த, தி.மு.க., தலைமை விருப்பம் தெரிவித்துள்ளது. அதனால், அதிருப்தியில் உள்ள ஜானகிராமன், சிவா ஆகியோர், புதுச்சேரி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என, மேலிடம் கட்டளையிட்டுள்ளது.

இது குறித்து தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: கருணாநிதி தலைமையில், இம்மாதம் 9ம் தேதி மாலை 5:00 மணிக்கு, புதுச்சேரி மாநில நிர்வாகிகள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நடைபெறும். அப்போது புதுச்சேரி மாநில மற்றும் காரைக்கால் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் ஜானகிராமன், சிவா ஆகியோர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Saminathan - mumbai,இந்தியா
05-டிச-201212:22:48 IST Report Abuse
R.Saminathan எந்த தேர்தல் வந்து என்ன புன்னியம்,எந்த கட்சி வந்து என்ன பலன்,அப்படி தேர்தல் வந்தா மக்கள் புதிய கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் புதுச்சேரியில் புதிய மாற்றம் ஏற்பட வேண்டும்,தி.மு.க. தலைவர் திரு.கலைஞர் அவர்கள் பஞ்சாயத்து பண்ணினாலும் ஒரு புன்னியமுமில்லை,
Rate this:
Share this comment
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
05-டிச-201219:36:47 IST Report Abuse
s.maria alphonse pandianகலைஞரின் பஞ்சாயத்துக்கு புதுவையில் பலன் இருந்ததா என ஜனவரியில் தெரிந்து கொள்ளுங்கள்......
Rate this:
Share this comment
Cancel
K HARIPRASAD - Kampala,உகான்டா
05-டிச-201211:23:22 IST Report Abuse
K HARIPRASAD திருவாளர் கருணாநிதிக்கு பஞ்சாயத்து தலைவர் பதவியும் அளிக்கலாமே
Rate this:
Share this comment
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
05-டிச-201219:35:48 IST Report Abuse
s.maria alphonse pandianமக்கள் தொண்டனுக்கு எந்த பதவி கொடுத்தாலும் தகும்..பதவி இல்லாவிட்டாலும் தொண்டு தொடரும்...சிலரை போல ஓய்வெடுப்பதையே தொழிலாக கொண்டவரல்ல கலைஞர்..ஓய்வறியா சூரியன்......
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
05-டிச-201206:15:02 IST Report Abuse
s.maria alphonse pandian புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றியை பதிக்கும்...என்.ஆர். காங்கிரசுக்கு பலத்த போட்டியை கொடுக்கும்....கூட்டப்பட்டுள்ளது உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டமே தவிர, கட்ட பஞ்சாயத்து கூட்டமல்ல....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்