டெஹ்ரான்: அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை, ஈரான் கைப்பற்றியுள்ளது.ஈரான், அணு ஆயுதங்களை தயாரிப்பதாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சந்தேகிக்கின்றன. இதன் காரணமாக, அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. "அணுசக்தியை ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு தான் பயன்படுத்துகிறோம்' என ஈரான் கூறி வருகிறது.எனினும், இதை நம்பாத அமெரிக்கா, பல வகைகளிலும், ஈரானை உளவு பார்த்து வருகிறது. ஈரானின் அணுசக்தி நிலையம் உள்ள பகுதிகள், கச்சா எண்ணெய் உள்ள பகுதிகளை, அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானங்கள் கண்காணிக்கின்றன.ஏற்கனவே, இது போன்ற ஒரு விமானத்தை ஈரான் பிடித்து வைத்து கொண்டது. அமெரிக்கா வற்புறுத்தியும் தர மறுத்து விட்டது. தங்கள் நாட்டு எல்லையில் பறந்த மற்றொரு ஆளில்லாத விமானத்தை, சமீபத்தில் தகர்க்க முயன்றது.இதற்கிடையே, தற்போது, வளைகுடா பகுதியில், தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் பறந்த சிறிய ரக ஆளில்லா விமானத்தை, ஈரான் கடற்படை பிடித்துள்ளது. எப்போது பிடித்தது, எவ்வாறு பிடித்தது என்பதை ஈரான் அரசு, தெரிவிக்கவில்லை."வளைகுடா பகுதியில் பறக்கவிடப்பட்ட ஆளில்லா விமானங்கள் அனைத்தும் சரியாக உள்ளன. எதுவும் காணாமல் போகவில்லை' என, அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.