பெய்ரூட்: சிரியாவில் போதிய பாதுகாப்பு இல்லாததால், அந்நாட்டிலிருந்து, ஐ.நா., தன் ஊழியர்களை வாபஸ் பெற்றுள்ளது.சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலகக் கோரி, கிளர்ச்சியாளர்கள், 20 மாதங்களாக போராடி வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை ஒடுக்க, ஆசாத், அரசு, ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறது. அதிபர் பதவி விலக மறுத்து விட்டதால், கிளர்ச்சியாளர்களுக்கு, அமெரிக்கா, ஆயுத உதவி அளித்து வருகிறது.இதனால், சிரியாவில் தொடர் சண்டை நடக்கிறது. அலெப்போ மற்றும் எல்லைப்புற பகுதிகளை, கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர். இதை மீட்க, ராணுவம், தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரை, 40 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்; மூன்று லட்சம் பேர், அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.நாளுக்கு நாள் சண்டை வலுப்பதால், பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது. இதனால், ஐக்கிய நாடுகள் சபை, தங்கள் ஊழியர்களை, இங்கிருந்து வாபஸ் பெற்றுள்ளது.சிரியாவுக்கு பல நாடுகள், விமான சேவையை ரத்து செய்து விட்டன. இதனால், நூற்றுக்கும் அதிகமான வெளிநாட்டு பணியாளர்களை, ஐ.நா.,வாபஸ் பெற்றுள்ளது. அவசிய தேவைக்கு, உள்ளூரில் உள்ள, 900 பணியாளர்களை பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.