ஐரோப்பிய "ரோமா' பழங்குடியினர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் : இந்திய எஸ்டோனிய ஆய்வில் கண்டுபிடிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

லண்டன்; ஐரோப்பிய நாடுகளில் காணப்படும், "ரோமா' பழங்குடிகள் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் பரவலாக காணப்படும் "ரோமா' பழங்குடிகள், இந்நாள் வரையில், தீண்டதகாதவர்களாகவே கருதப்படுகின்றனர். இந்தியாவிலிருந்து, 1,500 ஆண்டுகளுக்கு முன், ஐரோப்பாவுக்கு இவர்கள் குடிபெயர்ந்ததாக கூறப்படுகிறது. சிந்துசமவெளிக்கு படையெடுத்து வந்த அரேபியர்கள், இவர்களை ஈராக்கில் குடியேற்றியதாகவும் வரலாற்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.ஒரு சில நாடுகளில் இந்த பழங்குடிகள், குதிரைக்கு லாடம் அடிப்பது, கரடியை வைத்து வித்தை காட்டுவது, ஜோதிடம் சொல்லுவது, இசை கருவி மற்றும் பெண்களுடன் நடனமாடி பிழைப்பது போன்ற வேலைகளை செய்துள்ளனர்.ஹிட்லர் காலத்தில் யூதர்களுக்கு இணையாக, ஆயிரக்கணக்கான "ரோமா' பழங்குடிகளும் விஷ வாயு செலுத்தி கொல்லப்பட்டு உள்ளனர். ஆனால், யூதர்களுக்கு கிடைத்த அங்கீகாரம், "ரோமா' பழங்குடிகளுக்கு கிடைக்கவில்லை.

சமஸ்கிருத மொழியை கலந்து பேசும் இந்த பழங்குடிகள், ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்ததாகவும், இவர்கள் பயன்படுத்திய "ஸ்வஸ்திக்' சின்னத்தை தான் நாசி கட்சியினர் பயன்படுத்தி கொண்டதாகவும், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்."ரோமா' பழங்குடிகள் சோம்பேறிகள்; அவர்கள் சமூகத்துடன் சேர்ந்து வாழ முடியாதவர்கள் என, ஐரோப்பியர்களால் ஒதுக்கப்படுகின்றனர். செக் மற்றும் ஸ்லோவேவியா நாடுகளில், "ரோமா' மக்கள் வாழும் பகுதியை சுற்றிலும் மதில் சுவர் கட்டப்பட்டு, மற்ற சமூகத்தவரிடமிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளனர்.இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளில் தஞ்சம் புகுந்த இப்பழங்குடி மக்கள், விரட்டியடிக்கப்பட்டு வருகின்றனர். வறுமையின் காரணமாக ஒரு சிலர் திருடியதால், இந்த பழங்குடியினர்கள் "திருடர்கள்' என்று சில நாடுகளில் கருதப்படுகின்றனர்.

ஸ்காட்லாந்து அரச குடும்பத்தினரின் நோயை இந்த பழங்குடியை சேர்ந்த சிலர் குணப்படுத்தியதால், அந்நாட்டில் இவர்களுக்கு ஒரு காலத்தில் மதிப்பளிக்கப்பட்டது. இவர்களில் பலர், சுவீடனுக்கும் குடிபெயர்ந்தனர், இதனால், அங்கு இவர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டது. தற்போது ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக உள்ள "பிளெமிங்கோ' நடனம் "ரோமா' பழங்குடியினருக்கே உரியது.இந்த பழங்குடிகள், வெள்ளையர்களை விட நிறத்தில் குறைந்து, இந்தியர்களை போன்று இருந்ததால், இன்று வரை ஒதுக்கப்பட்டவர்களாக தான் உள்ளனர்.இவர்கள் எகிப்து நாட்டை சேர்ந்தவர்கள் என, நீண்ட நாட்களாக கருதப்பட்டது. ஆனால், தற்போது கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்திய மரபணு ஆய்வில் "ரோமா' பழங்குடியினர், இந்திய வம்சாவளியினர் என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஐதராபாத்தில் உள்ள மரபணு ஆராய்ச்சி மையமும், எஸ்டோனிய ஆய்வாளர்களும், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகமும் இணைந்து, ஐரோப்பிய நாடுகளில் உள்ள, 1,000க்கும் அதிகமான "ரோமா' பழங்குடியினரின் குரோமோசோம்களை, இந்தியர்களின் செல்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தது. "ரோமா' பழங்குடிகளின் "ஒய்' குரோமோசோமும், இந்தியர்களின் குரோமோசோமும் ஒரே மாதிரியாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, பிரிட்டன் ஜிப்சி கவுன்சில் நிர்வாகி ஜோசப் ஜோன்ஸ் குறிப்பிடுகையில்
, "நாங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விலாசமே இல்லாமல் இருந்தோம். இந்த ஆய்வின் மூலம் நாங்கள் இந்திய சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற அங்கீகாரம் கிடைத்து உள்ளது. எங்களை தீண்டதகாதவர்கள் என்று சொன்னாலும் பரவாயில்லை. இந்திய வம்சாவளியினர் என்ற அங்கீகாரமே போதும்' என்றார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
maravan - dublin,அயர்லாந்து
05-டிச-201221:46:43 IST Report Abuse
maravan நானும் இவர்களை தினந்தோறும் பார்த்திருக்கிறேன்...இவர்கள் இந்தியர்கள் போல் ஆனால் நல்ல கலர். எப்படி இவர்கள் ரோமானியர்கள் என்று நினைப்பேன்... இப்பொழுது உண்மை புரிந்தது. .ஆம் அவர்கள் மிக ஏழ்மை வாழ்க்கை வாழ்கிறார்கள். பெண்கள் உடுத்தும் ஆடைகள் கூட பாவாடை தாவாணி போன்று உள்ளது...இங்கு உள்ள ஐரிஸ் மக்கள் கூட அவர்களை முழுமையாக ஏற்றுகொள்வதில்லை...இங்கு அவர்கள் நம்மூர் நரிக்குறவர்கள் போல...
Rate this:
Share this comment
Cancel
Raj - Nellai,இந்தியா
05-டிச-201213:51:58 IST Report Abuse
Raj சமஸ்கிருத மொழி பேசுபவர்கள் எப்படி இந்தியர்களாக இருக்க முடியும்?
Rate this:
Share this comment
Hari Doss - Pollachi,இந்தியா
05-டிச-201222:37:50 IST Report Abuse
Hari Dossபண்டைய இந்தியாவின் மொழியே சம்ஸ்க்ருதம் என்பதை தெரியாத நீயெல்லாம் இந்தியன் என்று எப்படி சொல்லிக் கொள்கிறாய்?...
Rate this:
Share this comment
Cancel
MUTHUKUMARAN - Paris,பிரான்ஸ்
05-டிச-201213:05:18 IST Report Abuse
MUTHUKUMARAN இது பலருக்கு தெரியாத பழைய செய்தி, இவர்கள் "நாம் இந்திய வம்சாவளியினர்" என்று கூறுவதில் பெருமை அடைகிறார்கள் , மேலும் இவர்களிடம் உள்ள சில புகைப்படங்களை ஆதாரமாக காட்டி, நாங்கள் இந்தியர் தான் என்று நம்மைகாட்டிலும் பெருமையாக சொல்கிறார்கள். இந்த செய்தியில் கூறிய நாடுகளில் பல சொலோனா துன்பங்களுக்கு ஆட்பட்டாலும், தங்களின் அடையாளத்தை இழக்கவில்லை. இந்தற்காகவாவது இவர் களின் துயர் துடைக்க நம்மால் இயன்ற உதவிகளை இவர்களுக்கு செய்யவேண்டும். முத்துக்குமரன்.
Rate this:
Share this comment
Cancel
sundar the great - chennai  ( Posted via: Dinamalar Android App )
05-டிச-201212:48:59 IST Report Abuse
sundar the great come to india....our bharatha matha will save u..........india is the great country in the world.....
Rate this:
Share this comment
Cancel
Premnath Italy - Milan,இத்தாலி
05-டிச-201212:30:10 IST Report Abuse
Premnath Italy நிறம் கறுப்பு என்றால் எல்லா நாட்டிலும் தீண்டத்தகாதவர்கள்தான் போல....
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
05-டிச-201212:17:48 IST Report Abuse
kundalakesi நெட்டிலும பார்த்தேன். நம்மவர்களை விட நல்ல தோற்றம், அன்பு ஆனந்தம உடைய இவர்களையா மிருக வாழ்க்கை என்றார்? த்சு த்சு . எது கிடைத்ததோ அதை வைத்து திருப்தியாக வாழும் இவர்கள் ஆதரிக்கத் தகுந்தவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
05-டிச-201211:42:56 IST Report Abuse
arabuthamilan அய்யோ இவர்களுக்கு இந்தியர்களின் புத்தி வரக்கூடாது. (சக இந்தியனுக்கு தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுக்காத புத்தி)
Rate this:
Share this comment
Cancel
Paris EZHILAN - Paris,பிரான்ஸ்
05-டிச-201203:52:48 IST Report Abuse
Paris EZHILAN இது மிக பழைய செய்தி. இவர்கள் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்படுகின்றனர். பழமையில் உறிபோய் வீடு அற்று, கல்வி இல்லாமல் மிருகங்களை போல் வாழ்கின்றனர்.
Rate this:
Share this comment
Subramanian S - Northampton, UK,இந்தியா
05-டிச-201213:39:26 IST Report Abuse
Subramanian Sமிருகத்துக்கும் மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் உளறி இருக்கிறார்...ஏன் என்றால் இது ஐரோப் ..இதுவே இந்திய என்றல் நியாயம் வேறு விதமாக்ஹா இருக்கும் ... ஒதிக்கி வைப்பதும் தீந்த தகாதது தான். இதுவே இந்தியாவில் நடந்தால் தீண்டாமை ..ஐரோப் இல் நடந்தால் "அவர்கள் மிருகங்கள் "...என்ன நியாயம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்