126 போர் விமானங்கள் வாங்க முடிவு : ராணுவ அமைச்சர் அந்தோணி அறிவிப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: "பிரான்சின், "டஸ்சால்ட் ஏவியேஷன்' விமான நிறுவனத்திடம் இருந்து, 126, நடுத்தர ரக, போர் விமானங்களை வாங்க உள்ளோம்; இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது' என, ராணுவ அமைச்சர், ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்.எம்.பி., ஒருவருக்கு, அமைச்சர் அந்தோணி எழுதியுள்ள கடிதத்தில், கூறப்பட்டுள்ளதாவது:விமானப்படை விமானிகளுக்கு, பயிற்சி அளிப்பதற்காக, டோர்னியர் ரகத்தை சேர்ந்த, 14 விமானங்கள், இந்துஸ்தான் ஏரோநாடிகல் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படும். அதுபோல, கடற்படையும், எச்.ஏ.எல்., நிறுவனத்திடம் இருந்து, 12, டோர்னியர் ரக விமானங்களை வாங்க உள்ளது.பிரான்சின், "டஸ்சால்ட் ஏவியேஷன்' விமான நிறுவனத்திடம் இருந்து, 126, நடுத்தர ரக, போர் விமானங்களை வாங்க உள்ளோம். இதற்கான, பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.நிலத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தவும், வான்வெளி தாக்குதலை சமாளிக்கவும் திறன் படைத்த, நீர்மூழ்கி கப்பல்களை கட்ட, ராணுவ கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.ஆந்திராவின், கார்வார், கடற்படை தளத்தை விரிவாக்க, இந்திய நிறுவனங்கள் எதுவும், இதுவரை முன்வரவில்லை. முன்வந்த நிறுவனங்கள், போதிய நிதி தகுதி, செயல் திறன் படைத்ததாக இல்லை.இந்திய கடலோரம் முழுவதும், கண்காணிப்பு பணிகளுக்காக, 46, ரேடார் கருவிகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான ஒப்புதலை, மத்திய அரசு வழங்கியுள்ளது. அடுத்த ஆண்டு, மார்ச் முதல், திட்டம் செயல்படுத்தப்படும்.பொதுத் துறையை சேர்ந்த, எச்.ஏ.எல்., நிறுவனத்தின், 10 சதவீத பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி'யின் பரிந்துரைகளின் படி, இன்னும், ஆறு மாதங்களில், அப்பணி மேற்கொள்ளப்படும்.ராணுவ அதிகாரிகள் தேர்வாணையமான, எஸ்.எஸ்.பி.,யை, மேலும், ஏழு இடங்களில் அமைக்க உள்ளோம். அதில், இரண்டு ராணுவத்திற்கும், மூன்று, கடற்படைக்கும், இரண்டு, விமானப்படைக்கும் அதிகாரிகளை தேர்வு செய்யும்.விளையாட்டு வீரர்களுக்கு, ராணுவத்தில் கவுரவ பதவி வழங்கப்படுவது குறித்து, எந்த விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை. பிரபலமான வீரர்களுக்கு, கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது. அதை நிறுத்தும் எண்ணம் எதுவும் இல்லை.கிரிக்கெட் வீரர், சச்சின் டெண்டுல்கருக்கு, விமானப்படையின், குரூப் கேப்டன் பதவியும், துப்பாக்கி சுடும் வீரர், அபினவ் பிந்த்ரா மற்றும் கிரிக்கெட் கேப்டன், தோனிக்கு, பிரதேச ராணுவ படை பிரிவில், கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthi - Kerala,இந்தியா
05-டிச-201214:27:45 IST Report Abuse
Karthi காச ஆட்டைய போட போறம்னு தெளிவா சொல்லுங்க. அப்போதான் எங்களுக்கெல்லாம் தெளிவா புரியும்.
Rate this:
Share this comment
Cancel
Aboobacker Siddeeq - Singapore,சிங்கப்பூர்
05-டிச-201205:43:16 IST Report Abuse
Aboobacker Siddeeq நாட்டு பாதுகாப்பில் முன்னேற்றம் கொண்டுவர காங்கிரஸ் அரசு ஆவண செய்கிறது என்று மட்டும் நினைத்து விட வேண்டாம் வாசகர்களே... இருக்கும் சில மாதங்களுக்குள் சுருட்டுவதற்கு வழி செய்கிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
05-டிச-201205:29:50 IST Report Abuse
Lion Drsekar நம் நாட்டில் இல்லாத இயற்க்கை வளமா? நம் நாட்டில் இல்லாத விஞ்ஞானிகளா ? நம் நாட்டில் இல்லாத தொழில் நுட்பங்களா ? எங்கு எது இல்லை? அப்படி இருக்க ஏன் வெளி நாட்டிலிரிந்து எல்லாமே வாங்கப் படவேண்டும்? வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்