uddhav set to samna editer | சாம்னா' ஆசிரியராக உத்தவ் நியமனம் | Dinamalar

சாம்னா' ஆசிரியராக உத்தவ் நியமனம்

Added : டிச 04, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சாம்னா' ஆசிரியராக உத்தவ் நியமனம்

மும்பை; சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான, "சம்னா'வின் ஆசிரியராக, உத்தவ் தாக்கரே நியமிக்கப்பட்டுள்ளார்.சிவசேனா கட்சியின் கொள்கைகளை, மராத்தி மக்களுக்கு விளக்குவதற்காக, அந்த மொழியில், "சாம்னா' என்ற பத்திரிகையை, அந்த கட்சியின் தலைவர் பால் தாக்கரே, 1988ல், துவக்கினார். இதேபோல், மகாராஷ்டிராவில் வசிக்கும், வட மாநில மக்களுக்கு, சிவசேனா கட்சியின் கொள்கையை விளக்குவதற்காக, "தோப்கார் கா சமன்னா' என்ற பத்திரிகையை, இந்தியில் துவக்கினார்.இந்த இரண்டு பத்திரிகைகளின் ஆசிரியராக, பால் தாக்கரே தான், இருந்து வந்தார். சமீபத்தில், அவர் இறந்தததை அடுத்து, இந்த பத்திரிகைகளின் ஆசிரியராக, அவரது மகனும், சிவசேனா கட்சியின் செயல் தலைவருமான, உத்தவ் தாக்கரே நியமிக்கப்பட்டுள்ளார்.ஆனாலும், பத்திரிகையின் முகப்பு பக்கத்தில், "நிறுவன ஆசிரியர்' என, பால் தாக்கரேயின் பெயர், தொடர்ந்து இடம் பெற்றிருக்கும் என்றும், கடைசி பக்கத்தில் மட்டுமே, "ஆசிரியர்' என, குறிப்பிட்டு, உத்தவின் பெயர் இடம் பெற்றிருக்கும் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை