""உர விலை அதிகரிப்பால், கோதுமை மற்றும் அரிசி உற்பத்தியை பெருக்கும் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. மானிய விலையில், உரங்கள் வழங்குவதற்கும் ஒரு வரம்பு உள்ளது,'' என, விவசாய துறை அமைச்சர், சரத் பவார் கூறினார்.லோக்சபாவில், நேற்று அவர் கூறியதாவது:நாட்டின் கிழக்கு மாநிலங்களில், விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்கான, பசுமை புரட்சி திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளன. அசாம், பீகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தர பிரதேசத்தின் கிழக்கு பகுதி மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில், இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.அரிசி மற்றும் கோதுமை விளைச்சலுக்கு தான், இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். இதற்காக, செழிப்பான விதைகள், உரங்கள் பயன்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த ரசாயன உரங்கள் பூச்சி மருந்துகளைக் கைவிட்டு இயற்க்கை உரங்களையும், பூச்சி ஒழிப்பான்களையும் பிரபலப் படுத்தினால் செலவு குறையுமே. அந்நியர்களின் லாபி தான இந்த உர விலை ஏற்றத்துக்குக் காரணம். இயற்கை விவசாயமே நீடித்த பலனை தருவது அரிசி கோதுமை உணவைக் குறைத்து சிறு தானியம் , காய்கறி பழங்களை உண்ணும் வழக்கத்தை பிரசாரம் மூலம் அறிமுகபடுத்துங்களேன்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.