yesterday in parliament | பார்லிமென்டில் நேற்று... | Dinamalar

பார்லிமென்டில் நேற்று...

Added : டிச 04, 2012
Advertisement
 பார்லிமென்டில் நேற்று...

ஏ.டி.எம்., இயந்திரங்களில்கள்ள ரூபாய் நோட்டுகள்

""வங்கிகளின், தானியங்கி, பணம் வழங்கும் இயந்திரங்களான, ஏ.டி.எம்.,களில், கள்ள, ரூபாய் நோட்டுகள் அதிகமாக புழங்குகின்றன,'' என, புரட்சிகர சோசலிச கட்சி எம்.பி., பிரசாந்தா கே.மஜும்தான் குற்றம் சாட்டினார்.லோக்சபாவில், நேற்று அவர் பேசியதாவது:நாடு முழுவதும் கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஏ.டி.எம்., இயந்திரங்களிலும், ஏராளமான கள்ள நோட்டுகள் வெளிவருகின்றன. இவற்றை கட்டுப்படுத்த, வங்கிகளும், வங்கிகள் சார்பில், ஏ.டி.எம்., இயந்திரங்களில் பணத்தை வைக்கும் நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏ.டி.எம்., இயந்திரங்களில் கள்ள நோட்டுகள் வழங்கப்படுவது கண்டறியப்பட்டால், அதற்கான பொறுப்பை, வங்கியும், இயந்திரத்தை நிர்வகிக்கும் நிறுவனமும் ஏற்க வேண்டும்.ஏ.டி.எம்., இயந்திரங்களில் கள்ள நோட்டுகள் வருவதால், சாதாரண மக்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்; நாட்டின் பொருளாதாரமும் பாழாகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

எல்லையில் கண்காணிப்பு ‌லோக்சபாவில் அமைச்சர் உறுதி
""எல்லையில் சீன ராணுவத்தின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன,'' என, ராணுவ அமைச்சர், அந்தோணி கூறினார்.லோக்சபாவில், நேற்று அவர் கூறியதாவது:நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் அவசியமான, எல்லைப் பாதுகாப்பில் மிகுந்த கவனமாக உள்ளோம். சீனாவுடனான எல்லையில், அந்நாட்டின் ராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறோம். பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு உள்ளோம்.ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த, ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் வட கிழக்கு மாநிலங்களை இணைக்கும், ராணுவத்திற்கு மட்டுமான, விசேஷ ரயில்வே பாதை அமைப்பது குறித்து திட்டம் வரையப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சகம் உதவியுடன், இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.இவ்வாறு, அமைச்சர் அந்தோணி கூறினார்.நாடு முழுவதும் ஐந்து லட்சம்போலீஸ் பணியிடங்கள் காலி""நாடு முழுவதும், ஐந்து லட்சம் போலீசார் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை விரைந்து நிரப்ப, மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன,'' என, உள்துறை இணையமைச்சர், முள்ளப்பள்ளி, ராமச்சந்திரன் கூறினார்.லோக்சபாவில் நேற்று, கேள்வி நேரத்தின் போது, அவர் கூறியதாவது:கடந்த, 2011, ஜனவரி மாதத்தின் படி, நாடு முழுவதும், 15.63 லட்சம் போலீசார் உள்ளனர். ஆனால், 20.64 லட்சம் போலீசார் நியமிக்கப்பட்டிருக்கப்பட வேண்டும். 5.02 லட்சம் போலீஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன.காலியிடங்களை விரைவாக நிரப்ப, மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. லட்சம் பேருக்கு, 173 போலீசார் இருக்க வேண்டும் என, போலீஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால், இப்போது, லட்சம் பேருக்கு, 131 போலீசார் தான் உள்ளனர்.இவ்வாறு, அமைச்சர், ராமச்சந்திரன் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை