புதுடில்லி: ஜனாதிபதியாக, பிரணாப் முகர்ஜி பதவியேற்ற பின், அவரின் கருணையால், கைதி ஒருவர் தூக்கு தண்டனையிலிருந்து தப்பியுள்ளார்; அவருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் அத்பீர் சிங். இவர், 1996ல், தன் சிற்றன்னை மற்றும் சிற்றன்னையின் மகன், மகளை சொத்து தகராறு காரணமாக கொலை செய்தார். அத்பீர் சிங் கைது செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகள் வழக்கு விசாரணை நடந்தது. பின், அத்பீர் சிங்கிற்கு, செசன்ஸ் கோர்ட் தூக்கு தண்டனை விதித்தது; இந்த தண்டனையை ஐகோர்ட்டும், 2010ல், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன.அத்பீர் சிங்கின் கருணை மனு மீது, கடந்த மாதம், 15ம் தேதி ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி நடவடிக்கை எடுத்தார். தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி, உத்தரவு பிறப்பித்து இருந்தார்.ஜனாதிபதியாக, பிரணாப் பதவியேற்றப்பின், அவரது கருணை பார்வையால், அத்பீர் உயிர் தப்பியுள்ளார். கருணை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரம், ஜனாதிபதி அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.மும்பை தாக்குதல் குற்றவாளியான, அஜ்மல் கசாப்பின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு, கடந்த மாதம், 5ம் தேதி, ஜனாதிபதி உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து, சமீபத்தில், கசாப் தூக்கிலிடப்பட்டார்.மேலும், பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு உட்பட ஒன்பது பேரின் கருணை மனுக்களை, மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் ஆய்வு செய்வதற்காக ஜனாதிபதி திருப்பி அனுப்பியுள்ளார்.இந்நிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பரிசீலனைக்காக, தற்போது ஒரே ஒரு கருணை மனு மட்டும் நிலுவையில் உள்ளது. மனைவியையும், குழந்தையையும் கொடூரமாக கொலை செய்ததற்காக, சாய்பன்னா நிங்கப்பா என்ற கைதிக்கு, 2005ம் ஆண்டு சுப்ரீம்கோர்ட், தூக்கு தண்டனையை உறுதி செய்தது.இவரது, மனு தான் நிலுவையில் உள்ளது. இதற்கு, மத்திய உள்துறை அமைச்சகம் தன் பரிந்துரையை, கடந்த மாதம், 5ம் தேதி அனுப்பி விட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.