புதுடில்லி: "மானிய விலையில் அளிக்கப்படும், காஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையை, 12 ஆக உயர்த்த வேண்டும்' என, லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி., குரல் எழுப்பினார். அவரின் கருத்துக்கு, எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்ற பேதமின்றி, அனைத்து உறுப்பினர்களும் மேஜையை தட்டி ஆதரவு தெரிவித்தனர்.
"வீடுகளுக்கு ஆண்டுக்கு ஆறு காஸ் சிலிண்டர்கள் மட்டுமே, மானிய விலையில் வழங்கப்படும்' என, செப்டம்பர் மாதம், மத்திய அரசு அறிவித்தது. இதற்கு அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த மாதம், சூரஜ்குண்டில் நடந்த காங்கிரஸ் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திலும், பெரும்பாலான தலைவர்கள், கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.சமீபத்தில், பார்லிமென்டில் இது குறித்து கேள்வி எழுந்த போது, நிதி அமைச்சர் சிதம்பரம், "பெட்ரோலிய அமைச்சகம் தான் முடிவு செய்ய வேண்டும்' என்று கூறி நழுவினார்.இந்நிலையில், நேற்று பார்லிமென்டில், கேள்வி நேரம் முடிந்ததும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜகதாம்பிகா பால் எழுந்து பேசினார்; அப்போது அவர் கூறியதாவது:மானிய விலை காஸ் விநியோகத்தில் கட்டுப்பாடு கொண்டு வந்தால், அது கள்ளச்சந்தை விற்பனைக்கு வழி வகுக்கும். ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் என்ற எண்ணிக்கையை, 12 ஆக உயர்த்த வேண்டும். தற்போது மானியம் அல்லாது சிலிண்டர், 950 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. ஆறு மானிய சிலிண்டர்கள் முடிந்ததும், ஒரு சாதாரண குடிமகனால், இவ்வளவு விலை கொடுத்து, மான்யம் இல்லாத சிலிண்டரை வாங்க முடியாது. அதனால், மானிய சிலிண்டரையே கள்ளச் சந்தையில் சற்று கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.மலைப்பிரதேச மாநிலங்களான ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில், குளிர்காலங்களில் காஸ் சிலிண்டர் தேவை அதிகமாக இருக்கும். எனவே, இது பற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும். ஆறு சிலிண்டர் கட்டுபாடு, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு வலியை ஏற்படுத்துவதாக உள்ளது. (பா.ஜ., உறுப்பினர்கள் குறுக்கிட்டு தேசத்தின் வலி காங்கிரசுக்கு தெரியாது என்று குரல் எழுப்பினர்)மேலும் ஒரு முகவரியில், ஒரு சமையல் காஸ் இணைப்பு தான் வழங்க முடியும் என்று காஸ் கம்பெனிகள் நெருக்கடி தருகின்றன. ஒரே முகவரியில், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தனித்தனியாக குடும்பம் நடத்துகின்றனர். மேலும், ஒரே முகவரியில், வாடகைக்கு குடியிருப்போரும் உள்ளனர்.எனவே, இந்த கெடுபிடியை தளர்த்த வேண்டும்.இவ்வாறு ஜகதாம்பிகா பால் பேசினார்.அவர் பேசும் போது, பா.ஜ., உறுப்பினர்கள், கோஷம் எழுப்பி மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆளுங்கட்சி தரப்பில் இருந்தும், பலர் ஆதரவு தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.