பெகுசராய்: பீகாரில், எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில், பயணிகள் சிலருக்கு காயம் ஏற்பட்டது.உத்தர பிரதேச தலைநகர், லக்னோவிலிருந்து, பீகாரின், பாராயுனி நகருக்கு சென்ற, எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று காலை, பெகுசராய் மாவட்டத்தின், சடாஜகத் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது.ரயில் பாதையில், எருமை கூட்டம் ஒன்று, திடீரென புகுந்தது. மாடுகள் மீது ரயில் மோதாமல் இருக்க, அவசர கால பிரேக்கை, டிரைவர், திடீரென பிடித்து, ரயிலை நிறுத்தினார்.இதனால், ரயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி, இரண்டு பெட்டிகள், தண்டவாளத்தை விட்டு கீழிறங்கின. பெட்டிகளில் இருந்த பயணிகள் சிலர், தூக்கி வீசப்பட்டனர். குண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டதால், அதிர்ச்சி அடைந்த சிலர், கீழே குதித்தனர். இதில், அவர்களுக்கு காயம் ஏற்பட்டது.தடம் புரண்ட பெட்டிகள், கழற்றி விடப்பட்டு, சில மணி நேர தாமதத்திற்கு பிறகு, ரயில் தன் பயணத்தை தொடர்ந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.