Rs 4 lakhs on giving info on terrerist | பயங்கரவாதி பற்றிதகவல் கொடுத்தால்ரூ.4 லட்சம் பரிசு | Dinamalar

பயங்கரவாதி பற்றிதகவல் கொடுத்தால்ரூ.4 லட்சம் பரிசு

Added : டிச 04, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: "பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் தொடர்புடைய, இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த, அப்துல் சுபான் குரோஷியை பற்றி, தகவல் கொடுப்போருக்கு, நான்கு லட்சம் ரூபாய், பரிசு வழங்கப்படும்' என, தேசிய புலனாய்வு அமைப்பான, என்.ஐ.ஏ., அறிவித்துள்ளது.என்.ஐ.ஏ., வெளியிட்டுள்ள அறிவிப்பு:மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த, அப்துல் சுபான் குரோஷி, 41, டில்லி, குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் நடந்த, பயங்கரவாத சம்பவங்களில் தொடர்புடையவன்.இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த குரோஷி, கேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில், பயங்கரவாத பயிற்சி முகாம் நடத்தியது தொடர்பாக, கேரள போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இதன்பின், இந்த வழக்கு, என்.ஐ.ஏ.,வுக்கு மாற்றப்பட்டது. நீண்ட காலமாக தலைமறைவாக இருப்பதை அடுத்து, குரேஷிக்கு எதிராக, "ரெட் கார்னர்' நோட்டீசும், இன்டர்போல் போலீசாரால், வெளியிடப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள, குரேஷி குறித்த தகவல் தருவோருக்கு, நான்கு லட்சம் ரூபாய், பரிசு வழங்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை