Advertisement
4 வயது குழந்தையை சீரழித்த காமகொடூரன் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2012,23:15 IST

பெங்களுரு: எல்.கே.ஜி., படித்த, நான்கு வயது குழந்தையை, பள்ளி வேனில் அழைத்து செல்லும் போது, கிளீனர் பலாத்காரம் செய்த சம்பவம், பெங்களூரை உலுக்கியுள்ளது.பெங்களுரு, நாகரபாவியில் வசித்து வருபவர்கள், முகமது - மாலிக் அன்வர் தம்பதி. இவர்களுக்கு, ஏழு வயதில் ஒரு மகனும், நான்கரை வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த குழந்தை, நாகர்பாவியிலுள்ள செயின்ட் சோபியா கான்வென்ட் உயர்நிலைப்பள்ளியில், எல்.கே.ஜி., படித்து வந்தது.தினமும், வழக்கமாக வீட்டிலிருந்து, பள்ளி வேன் மூலம் குழந்தையை பள்ளி நிர்வாகம் அழைத்து செல்வது வழக்கம். குழந்தைகளின் பாதுகாப்புக்காக, கிளீனர் ஒருவரும் உடன் செல்வார்.இந்நிலையில், நேற்று முன்தினம் பள்ளியிலிருந்து வரும் போதே, முகமதுவின் குழந்தை, அழுது கொண்டே வீட்டுக்கு வந்தது. இதை பார்த்த தாயார், ஏன் அழுகிறாய் என்று, கேட்டதற்கு, வலிக்கிறது என்று மட்டும் குழந்தை கூறியுள்ளது. கணவர் வெளியூர் சென்றிருந்ததால், குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.பரிசோதித்த டாக்டர், குழந்தையை யாரோ பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால், குழந்தையின் மர்ம உறுப்பில் காயம் காணப்படுகிறது என்று கூறி, சிகிச்சை செய்து அனுப்பினார்.டாக்டர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாயார், மகளிடம் அன்பாக விசாரித்தார். சம்பவத்தின் தீவிரத்தை உணராத, குழந்தை, தன் மழலை குரலில், அரை குறையாக நடந்த சம்பவத்தை கூறியுள்ளது. மகள் கூறியதை வைத்து, பள்ளி பஸ்சில் கிளீனராக வேலை செய்யும் ஷப்பண்ணா தான், இந்த கொடூர செயலை செய்துள்ளார் என, முடிவு செய்தார்.ஆத்திரமடைந்த, குழந்தையின் தாயார், பள்ளிக்கு சென்று, நிர்வாகத்திடம் புகார் செய்தார். பள்ளியின் பெயர் கெட்டு விடும் என்று தயங்கிய பள்ளி முதல்வர் ஞானபாரதி, போலீசில் புகார் செய்ய தயங்கினார். தாயார் வற்புறுத்தியதன் பேரில், ஞானபாரதி போலீசில் புகார் செய்தனர்.பள்ளிக்கு வந்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையறிந்த ஷப்பண்ணா, அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.பெங்களூரு சிட்டி மார்க்கெட்டிலிருந்து, வெளியூருக்கு தப்பி செல்ல முயன்ற போது, அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சம்பவத்தை கேள்விப்பட்ட, மற்ற குழந்தைகளின் பெற்றோர், கொந்தளித்து, பள்ளியின் முன் கூடி, தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு தர வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நேற்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அழைத்து சென்று, கிளீனர் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
07-டிச-201209:41:14 IST Report Abuse
p.manimaran இவனை சும்மாவிடக்கூடாது. தூக்கில் இட வேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Rajagiri.Siva - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
05-டிச-201213:13:48 IST Report Abuse
Rajagiri.Siva நரகத்தில் இருக்கவேண்டியவன் இவ்வுலகத்தில் இருக்கின்றான்...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.