புதுடில்லி: "ஐக்கிய அரபு குடியரசில், சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள, 45 ஆயிரம் இந்தியர்கள் விரைவில் தாயகம் திரும்புவர்' என, வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை மத்திய அமைச்சர், வயலார் ரவி கூறியுள்ளார்.ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில், சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ளவர்கள், நாட்டைவிட்டு வெளியேற வசதியாக, இரண்டு மாதம், பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.விசா காலம் முடிந்து விசாவை புதுப்பிக்க தவறியவர்கள் அனைவரும், இந்த இரண்டு மாத்திற்கு உள்ளாக, நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.இதில் அபராதமோ, தண்டனையோ விதிக்கப்பட மாட்டாது அல்லது அபராத தொகைøயை செலுத்தி, முறைப்படி விசா நடைமுறைகளை புதுப்பித்து கொள்பவர்கள் தொடர்ந்து வசிக்க அனுமதிக்கப்படுவர்.இரண்டு மாத மன்னிப்பு காலம், நேற்று துவங்கி, வரும் பிப்ரவரி, 3ம் தேதி வரை அமலில் இருக்கும். "பணிக்காக வழங்கப்பட்ட விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பவர்கள், சுற்றுலா விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். அத்து மீறி கள்ளத்தனமாக ஊடுருவியவர்களுக்கு இது பொருந்தாது; அவர்கள் கிரிமினல்களாக கருத்தப்படுவர்' என, அந்நாட்டு அரசு, தெளிவுபடுத்தியுள்ளது. ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில், சட்டத்திற்கு புறம்பாக, 45 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக, இந்திய தூதரகம் மதிப்பீடு செய்துள்ளது.இந்த, பொது மன்னிப்பு காலத்தை பயன்படுத்தி, தங்கள் மாநிலத்தை சேர்ந்த ஏழை தொழிலாளிகள் நாடு திரும்புவதற்கு வசதியாக, விமான டிக்கெட்டிற்கான செலவை ஏற்கும்படி மாநில அரசுகளுக்கு, மத்திய அமைச்சர் வயலார் ரவி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மேற்கண்ட தகவல்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகளாக உள்ளனர். முகவர்கள் மூலம் ஏமாற்றப்பட்டு , அதிக சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில் வந்தவர்கள். ஆனால், தற்போது, இந்தியா திரும்புவதற்கான விமான டிக்கெட் கட்டணத்தை செலுத்த முடியாமல் உள்ளனர்.இதற்கு முன், 2007ம் ஆண்டு, ஐக்கிய அரபு குடியரசில், சட்டத்திற்கு புறம்பாக, 3.42 லட்சம் பேர் தங்கியிருப்பதாக கணக்கிடப்பட்டது. அப்போது அறிவிக்கப்பட்ட, நான்கு மாத பொது மன்னிப்பு காலத்தை பயன்படுத்தி, மூன்று லட்சம் பேர் வெளியேறினர். இதில், இந்தியர்கள், 40 ஆயிரம் பேர் இருந்ததாக தூதரகம் தெரிவிக்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.