புதுடில்லி :சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்தது தொடர்பான, விவாதம் லோக்சபாவில் நேற்று நடந்தது. விவாதத்தில் பங்கேற்று, தலைவர்கள் பேசியதாவது;
முலாயம் சிங் - சமாஜ் வாதி தலைவர்: சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டை அனுமதித்தால், காங்கிரசுக்கு, லோக்சபா தேர்தலில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். அதே நேரத்தில், இது, பா.ஜ.,வுக்கு சாதகமாக அமையும். மகாத்மா காந்தியின் விருப்பத்திற்கு மாறான, இந்த முடிவை எடுத்துள்ள சோனியா, தன் பெயரில், "காந்தி' என, வைத்துள்ளதற்கு மதிப்பளிக்கும் வகையில், அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை, மறு பரிசீலனை செய்ய வேண்டும்.மத்திய ஆளும் கூட்டணியை ஆதரிக்கும் கட்சி என்ற முறையில், எங்களால் ஆன ஆலோசனைகளை, நாங்கள் வழங்கியுள்ளோம். "அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்தால், ஏராளமானோருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்ற, மோசடியான உறுதிமொழியை அளித்து, 25 கோடி, சிறு வியாபாரிகளின் வாழ்க்கையோடு விளையாடுவதை அனுமதிக்க முடியாது. இந்த முடிவை கைவிடவேண்டும் தாரா சிங் சவான் - பகுஜன் சமாஜ் : சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதை அவசரகதியில் நிறைவேற்றக் கூடாது. அதே நேரத்தில், இந்த விவகாரத்தில், மதவாத சக்திகளுடன் ஒன்றிணைந்து, செயல்பட வேண்டுமா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. இந்த மசோதாவை ஆதரிப்பது குறித்து, இன்று முடிவு எடுக்கப்படும். இளங்கோவன் - தி.மு.க., :சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டை கடுமையாக எதிர்க்கிறோம். அதே நேரத்தில், அரசுக்கு எதிராக ஓட்டளிக்க மாட்டோம். அரசை கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. எதிர்கட்சிகளுடனோ அல்லது பா.ஜ.வுடனோ ஒரு போதும் இணைய மாட்டோம். மத்திய அரசை கண்காணித்து, தகுந்த ஆலோசனைகளை வழங்குவோம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.