தெலுங்கானா காங்., எம்.பி.,க்கள் ஓட்டெடுப்பில் பங்கேற்க முரண்டு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்தது தொடர்பாக, லோக்சபாவில் நடைபெறும் விவாதத்தில் பங்கேற்பது குறித்த காங்., - எம்.பி.,க்கள் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இதில், பங்கேற்காமல், தெலுங்கானா காங்., - எம்.பி.,க்கள் புறக்கணித்தனர்.
சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்தது தொடர்பாக, ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் தேவை என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதைத் தொடர்ந்து, நேற்று லோக்சபாவில் விவாதம் துவங்கியது. இந்த விவாதத்தில், காங்., - எம்.பி.,க்கள் பங்கேற்பதை உறுதிப்படுத்தவும், எப்படி நடந்து கொள்வது என்பதை தெரிவிக்கவும், ஆலோசனை கூட்டம் நடந்தது.இதை, லோக்சபா முன்னவரும், மத்திய உள்துறை அமைச்சருமான சுசில் குமார் ஷிண்டே, மத்திய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத்தும் முன்னின்று நடத்தினர்.இந்த கூட்டத்தில், பங்கேற்காமல், ஆந்திரா தெலுங்கானா பகுதியை சேர்ந்த, எட்டு காங்கிரஸ் எம்.பி.,க்கள் புறக்கணித்தனர். இதனால், காங்., வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.தெலுங்கானாவை சேர்ந்த, மத்திய அமைச்சர்கள் ஜெயபால் ரெட்டி, சர்வே சத்தியநாராயணா மட்டும் பங்கேற்றனர்.""தெலுங்கானா தனி மாநில கோரிக்கை விஷயத்தில், எவ்வித முடிவும் எடுக்காமல் இருக்கும் காங்கிரஸ் மற்றும் ஐ.மு.,கூட்டணி அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுக்கவே இந்த முடிவை எடுத்தோம்,'' என, கரீம்நகர் எம்.பி. பொன்னம் பிரபாகர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், "ஓட்டெடுப்பில் பங்கேற்பது குறித்து, இன்று முடிவு செய்வோம்' என்றார்இதற்கிடையில், தெலுங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் மேலிடத்திற்கு, வரும் 9ம் தேதி வரை கெடு விதித்துள்ளனர். "தெலுங்கானா மாநிலம் அமைப்பது குறித்த முடிவை, அதற்குள் மேலிடம் அறிவிக்கவேண்டும்' என , நிபந்தனை விதித்துள்ளனர்.வரும், 9ம் தேதிக்குள் காங்கிரஸ் மேலிடம் முடிவை அறிவிக்கவில்லை என்றால், தெலுங்கானாவைச் சேர்ந்த குறைந்த பட்சம், 6 எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரசிலிருந்து விலகி புதிதாக முன்னணி ஒன்றை துவக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.கடைசியாக கிடைத்த தகவல்படி, தெலுங்கானாவைச் சேர்ந்த காங்., எம்.பி.,க்கள் இன்று நடக்கும் ஓட்டெடுப்பில் நடுநிலை வகிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகள் டில்லியில் தொடர்ந்து நடந்து வருகின்றன.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்