காரைக்கால்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்களை விடுவிக்க கோரி காரைக்கால் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.காரைக்கால் கீழகாசாக்குடிமேட்டைச் சேர்ந்த ராஜா, கந்தன், மகேந்திரன் மற்றும் கிளிஞ்சல்மேட்டைச் சேர்ந்த மோகனசுந்தரம் ஆகியோரது 4 படகுகளில் 31 பேர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் நேற்று முன்தினம் காலை சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.4 படகுகளில் மீன்பிடித்த கீழகாசாக்குடிமேடு கவிஅரசன், விஜயமணி, பன்னீர்செல்வம், செல்வகுமார், கதிர்வேல், சிவானந்தம், ரமேஷ், ராஜி, வேலு, தமிழ்மணி, அரசமணி, ராகுல், சூர்யமூர்த்தி, ராமையன் ஆகிய காரைக்காலைச் சேர்ந்த 18 பேர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 13 பேரும் என மொத்தம் 31 @பரும், நாகை மாவட்ட மீனவர்கள் 9 பேர் என மொத்தம் 40 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர்.மீனவர்கள் வேலை நிறுத்தம்:காரைக்கால் பகுதி மீனவர்கள் சிறைபிடித்து சென்றதால், நேற்று முதல் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தைத் துவக்கியுள்ளனர்.காரைக்கால் மாவட்ட காங்., மீனவரணி தலைவர் அரசன் கூறுகையில், கீழகாசாக்குடிமேடு, கிளிஞ்சல்மேடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்களை மீட்க மத்திய அமைச்சர் நாராயணசாமியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் மீனவர்களை விடுவிக்க புதுச்சேரி அரசும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.