புதுடில்லி,: குழந்தை தொழிலாளரை வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை அளிக்க வகை செய்யும், சட்ட மசோதா, ராஜ்யசபாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது."குழந்தை தொழிலாளர் (தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்ட திருத்த மசோதா, 2012' ஐ, மத்திய, தொழிலாளர் நலத்துறை அமைச்சர், மல்லிகார்ஜுன கார்கே, ராஜ்யசபாவில் நேற்று அறிமுகம் செய்தார். இந்த மசோதாவிற்கு, மத்திய அமைச்சரவை, ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்திருந்தது.தற்போது நடைமுறையில் உள்ள, குழந்தை தொழிலாளர் நல சட்டங்களின் படி, சில குறிப்பிட்ட வேலைகளில் மட்டும், குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால், அதிகபட்சம், ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.இதில், மாற்றம் செய்யப்பட்டு, வரையப்பட்டுள்ள, புதிய மசோதாவில், எவ்வித வேலைகளிலும், 14 வயதிற்கு குறைந்த குழந்தைகளை வேலையில் அமர்த்தக் கூடாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளை எவ்வித பணியிலும் ஈடுபடுத்தவும், அனுமதிக்கவும் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், குழந்தை தொழிலாளர்களாக இருந்து, மீட்கப்படும் குழந்தைகளுக்கு, அவர்கள் மீண்டும் கல்வியில் தொடர வாய்ப்பு வழங்கவும், மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மசோதாவில், குழந்தை தொழிலாளர் (தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1986ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.குழந்தைகளை பணியில் அமர்த்துபவர்களுக்கு, தற்போது நடைமுறையில் உள்ள, ஒரு ஆண்டு சிறை தண்டனை, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மசோதாவில், இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச அபராதமும், 20 ஆயிரம் ரூபாயிலிருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.மேலும், பருவ வயதினரை (டீன்ஏஜ்), எந்த அபாயகரமான தொழிலும், ஈடுபடுத்தக் கூடாது எனவும், இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.