ஆமதாபாத்,: குஜராத்தில், முதல் கட்ட ஒட்டுப்பதிவு நடக்கும் தொகுதிகளில், போட்டியிடும் வேட்பாளர்களில், 30 சதவீதம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.குஜராத்தில், சட்டசபை தேர்தல் இரண்டு கட்டமாக நடக்கிறது. வரும், 13ம் தேதி, 87 தொகுதிகளில், முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதில், மொத்தம், 846 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில், 482 வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் குஜராத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆய்வு செய்து, அதன் விபரங்களை வெளியிட்டுள்ளது.இதன்படி, 147 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர்; 39 வேட்பாளர்கள், தங்களின் சொத்து மதிப்பு, ஒரு லட்ச ரூபாய்க்கும் கீழ் என, குறிப்பிட்டுள்ளனர். 50 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் இருப்பதாக, 47 வேட்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.அரசியல் கட்சி வேட்பாளர்களின் சொத்து மதிப்பு, சராசரியாக ஒரு வேட்பாளர் என்ற அடிப்படையில் காங்கிரசுக்கு, 6.50 கோடி ரூபாயும், பா.ஜ.,வுக்கு, 4.50 கோடி ரூபாயும், குஜராத் பரிவர்த்தன் கட்சிக்கு, ஒரு கோடி ரூபாயும் உள்ளது.மொத்த வேட்பாளர்களில், 103 வேட்பாளர்கள் தங்களின், வருமான வரி கணக்கு எண் (பான் நம்பர்) பற்றிய விபரத்தை தரவில்லை. 240 வேட்பாளர்கள், தாங்கள் இதுவரை வருமான வரி கணக்கை தாக்கல் செய்ததில்லை என, குறிப்பிட்டுள்ளனர். இதில், காங்.,வேட்பாளர்கள், 16 பேரும், பா.ஜ., வேட்பாளர்கள், 12 பேரும் அடக்கம்.வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்ற குறிப்பிட்ட வேட்பாளர்களில்,சோம்நாத் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ராஜபாருக்கு, 40 கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளது. அரசியல் கட்சி வேட்பாளர்களில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்கோட் கிழக்கு தொகுதியில் போட்டியிடும் இந்திரானில் ராஜ்குருவுக்கு, 122 கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளது. மேலும், தனக்கு, 27 கோடி ரூபாய்க்கு கடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.