மும்பை,: பால் தாக்கரேயின், உடல், தகனம் செய்யப்பட்ட, சிவாஜி பார்க்கிலிருந்து, சிவசேனா கட்சியினர் வெளியேற மறுப்பதால், மும்பை மாநகராட்சி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. "இது, சட்ட விரோதமான செயல்' என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.சிவசேனா தலைவர் பால் தாக்கரே, உடல் நலக்குறைவால், சமீபத்தில் காலமனார். மும்பையில் உள்ள, பிரபலமான, சிவாஜி பார்க்கில், அவரது உடல், நவம்பர், 18ல், தகனம் செய்யப்பட்டது. "தாக்கரேயின் உடல், தகனம் செய்யப்பட்ட இடத்தில், அவருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும்'என, சிவசேனா கட்சியினர், வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கு, மகாராஷ்டிராவில் உள்ள, மற்ற அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். "சிவாஜி மகராஜ், மகாராஷ்டிரா மக்களின் கடவுள். சிவாஜி பார்க்கில், அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதே இடத்தில், மேலும் ஒரு தலைவருக்கு, நினைவிடம் அமைப்பது, சரியாக இருக்காது' என, மகாராஷ்டிராவை ஆளும், காங்கிரஸ் - தேசியவாத காங்., கூட்டணி தெரிவித்துள்ளது.இதற்கிடையில், தாக்கரே உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தையே, நினைவிடமாக கருதி, சிவசேனா கட்சியினர், தொடர்ந்து, அங்கேயே முகாமிட்டுள்ளனர். அங்கு செல்வதற்கு, சிறப்பு நடை பாதை அமைத்துள்ளனர். தடுப்பு வேலிகளும் அமைத்துள்ளனர். "சிவாஜி பார்க்கை விட்டு, வெளியேற முடியாது'என்றும், சிவசேனா கட்சியினர் கூறி வருகின்றனர்.இதனால், மும்பை மாநகராட்சி நிர்வாகம், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:தாக்கரே உடல் தகனம் செய்யப்பட்ட அன்று மட்டுமே, சிவாஜி பார்க்கை பயன்படுத்த, சிவசேனா கட்சியினருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தொடர்ந்து, 15 நாட்களாக, அவர்கள், அங்கேயே முகாமிட்டு உள்ளனர்.அத்துடன், விதிமுறைகளை மீறி, சிவாஜி பார்க்கில், சில சிறப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். இது, சட்ட விரோத செயல். உடனடியாக, சிவாஜி பார்க்கை விட்டு, சிவசேனா கட்சியினர் வெளியேற வேண்டும்.இவ்வாறு, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மகாராஷ்டிராவில், காங்கிரஸ் - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடந்தாலும், மும்பை மாநகராட்சி, சிவசேனா - பா.ஜ., கூட்டணி வசம் உள்ளது. சிவசேனா கட்சியை சேர்ந்த, சுனில் பிரபு தான், மேயராக உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.