புதுடில்லி: "மனைவியுடன் கணவன், கட்டாயமாக உடலுறவு கொண்டால், அது குற்றமாகாது' என, தெரிவித்து, குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்து, டில்லி, மாவட்ட கோர்ட் உத்தரவிட்டுள்ளது.டில்லியை சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவரின், முதல் கணவர் இறந்து விட்டார். இரண்டாவது கணவராக, சயீத் என்பவரை அந்தப் பெண், முறைப்படி மணந்தார். இருவருக்கும் இடையே, இல்லற வாழ்க்கையில், எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்த நிலையில், தன் சொத்துகளை கவர்வதற்காகவே, சயீத் திருமணம் செய்து கொண்டிருப்பார் என, திடீரென அந்தப் பெண்ணுக்கு சந்தேகம் வந்தது.இந்நிலையில், அப்பெண்ணுடன், வலுக்கட்டாயமாக சயீத் உடலுறவு கொண்டார். இதனால், கோபம் கொண்ட அந்தப் பெண், மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கடந்த, 2007ல் தொடரப்பட்ட வழக்கில், இரண்டு நாட்களுக்கு முன், தீர்ப்பு வழங்கப்பட்டது.வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி, ஜே.ஆர்.ஆர்யன், "சயீத் எந்த தவறும் செய்யவில்லை; மனைவியுடன் வலுக்கட்டாயமாக உறவு வைத்துக் கொண்டது, குற்றமல்ல. அது குற்றம் என, இந்திய தண்டனை சட்டங்கள் தெரிவிக்கவில்லை' என உத்தரவிட்டு, அவரை விடுதலை செய்தார்.மேலும் அவர் தன் தீர்ப்பில், ""சட்டப்படி திருமணம் செய்து கொண்ட கணவர், அந்தப் பெண்ணுடன் ஏற்கனவே பலமுறை உறவு வைத்துள்ள நிலையில், வலுக்கட்டாயமாக உறவு வைத்தது, இந்திய திருமண சட்டங்கள் மற்றும் தண்டனை சட்டங்களின் படி தண்டனைக்குரியது அல்ல,'' என்று உத்தரவிட்டு, அந்த நபரை விடுவித்தார்.எனினும், அந்தப் பெண்ணின் பொருட்களை திருடியது, மிரட்டியது, காயம் ஏற்படுத்தியது போன்ற பிரிவுகள் மீதான குற்றங்களை, விசாரித்து தீர்ப்பு வழங்குமாறு, மாஜிஸ்திரேட் கோர்ட்டிற்கு, வழக்கை மாற்றி, மாவட்ட நீதிபதி ஆர்யன் பரிந்துரை செய்தார்."மனைவியாக இருந்தாலும், வலுக்கட்டாயமாக அவருடன், செக்ஸ் உறவு வைத்தால், அது தண்டனைக்குரிய குற்றம்' என, சமீபத்தில் சட்டங்கள் திருத்தப்பட்ட நிலையில், டில்லி மாவட்ட நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கல்யாணம் ஆனாலே நீ அடிமை என்று தான் கோர்ட் கூறியுள்ளது என்பதை இங்கு உரத்த கூற வேண்டும், இப்படி பட்ட விசியம் வெளி வந்தால் நாடு முழுவதும் பெண்கள் இவன் கிள்ளுறான் கடிக்கிறான் என்று கோர்ட்டுக்கு வந்துவிடுவார்கள் என்ன செய்வது என்பது தெரியாமல் கோர்ட் இப்படி கூறிவிட்டது, இதற்கெலாம் கூட்டு குடும்பமாக வாழுங்கள் பெண்களே ஆண்கள் பயபடுவார்கள்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.