Advertisement
வரவேற்பாளராக முஸ்லிம் பெண்கள் இஸ்லாமிய அமைப்பு நிராகரிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2012,23:27 IST

முசாபர் நகர்: "முஸ்லிம் பெண்கள், வரவேற்பாளராக பணியாற்றுவது, "ஷரியா' சட்டத்திற்கு எதிரானது. அத்தகைய செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது' என, முன்னணி, முஸ்லிம் சமுதாய அமைப்பான, தாருல் உலூம் தியோபாண்ட் தெரிவித்துள்ளது.உத்தர பிரதேசத்தின், முசாபர்நகரில் செயல்படும், தாருல் உலூம் தியோபாண்ட் அமைப்பிடம், பாகிஸ்தான் நிறுவனம் ஒன்று, "வரவேற்பாளர்களாக, முஸ்லிம் பெண்களை நியமிக்க, ஷரியா சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா?' என கேட்டிருந்தது.தியோபாண்ட் அமைப்பு, அளித்துள்ள பதிலில், "வரவேற்பாளராக, முஸ்லிம் பெண்களை நியமிக்கக் கூடாது; அவ்வாறு அவர்களை அந்தப் பணியில் அமர்த்துவது, ஷரியா சட்டத்திற்கு எதிரானது. ஏனெனில், முஸ்லிம் பெண்கள், முகத்தை மூடிய படி தான், பிற ஆண்களுடன் பேச வேண்டும்' என தெரிவித்துள்ளது.இது பற்றி, உத்தர பிரதேச, உலாமாக்கள் சங்கத் தலைவர், முப்தி ஜுல்பிகர் அலி கூறும்போது, ""தியோபாண்ட் பிறப்பித்துள்ள உத்தரவு (பட்வா) நியாயமானது தான். வரவேற்பாளர் பணி, ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல், பிறருடன், கலந்து பேச வேண்டிய பணி. அதில், முகத்தை மூடிய படி பணியாற்ற முடியாது என்பதால், வரவேற்பாளர் பணியில், முஸ்லிம் பெண்கள் ஈடுபடக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
S.Dinakaran - Thanjavur,இந்தியா
05-டிச-201217:34:20 IST Report Abuse
S.Dinakaran பாவப்பட்ட பெண்கள். மகளிர் அமைப்புகள் எல்லாம் ஏங்கி போனார்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
govind - Muscat,இந்தியா
05-டிச-201213:23:19 IST Report Abuse
govind நமது உடன் பிறப்புகளும்... திக அன்பர்களும்........ பெண் முன்னேற்ற ஆர்வலர்களும்... இதை பற்றி பட்டி மன்றம் துவக்குவார்களா..... அல்லது பயத்தில் அமைதியாக இருப்பார்களா.... இவர்களால் இந்து சமுதாயத்தை மட்டும் தான் குறி வைத்து தாக்க இயலும்.... மற்ற விசயங்களில் பேஸ் வீக்கு... பில்டிங் ஸ்ட்ராங்கு.... ஹி ஹி ஹி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.