தர்மபுரி: ""தர்மபுரி அருகே ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உரிய நிவாரணம் வழங்கக் கோரி, டில்லியில் பார்லிமென்ட் முன், போராட்டம் நடத்தப் போகிறோம்,'' என, சமூக சமத்துவபடை கட்சி நிறுவனர், சிவகாமி தெரிவித்தார்.
தர்மபுரி கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உரிய நிவாரணம் வழங்கக் கோரி, அப்பகுதி மக்கள் கடந்த, 28ம் தேதி உண்ணாவிரம் இருந்தனர். உடல் நிலை பாதிக்கப்பட்ட, மங்கம்மாள் (எ) மங்கை, 20, உடல் நலம் பாதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவு இறந்தார். அதையொட்டி, சமூக சமத்துவ படை கட்சி சார்பில், அதன் நிறுவனர் சிவகாமி தலைமையில், நத்தம்"காலனி'யில் இரங்கல் கூட்டம் நடந்தது.
அதில் சிவகாமி பேசியதாவது: கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், மங்கமாள் குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்கக் கோரியும், வழக்கு விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரியும், வரும், 15ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது. டில்லியில், உள்துறை அமைச்சர் சுசில்குமார் சிண்டே ஆகியோரை சந்தித்து, கலவரம் தொடர்பான விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள பார்லிமென்ட் முன், கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரணம் கோரி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இப்போது எந்த சாதிக் கொடுமையும் பிராமணர்களால் நடத்தப் படுவதில்லை.பிராமணர்கள் தனித்தீவாக ஒதுங்கி நகர்ப்புற வாழ்க்கை வெளிநாட்டு வேலை என ஒதுங்கிவிட்டனர். இன்று சாதி இந்துக்கள் என்ற பட்டத்தைச் சுமப்பவர்கள் பிராமணர் அல்லாதாரே. சமீப காலங்களில் தமிழகத்தில் எந்த சாதிக் கலவரமும் பிராமணர்களால் தூண்டப்பட்டதில்லை. எந்தப் பிராமணரும் தீண்டாமை சுவர் எழுப்பியதில்லை,எல்லா இழிவுகளையும் அரங்கேற்றுபவர்கள் சாதி இந்துக்களாக வளம் வரும் பிராமணர் அல்லாதோர் திருக்கூட்டமே. ஆனால் பழக்க தோஷத்தில் திராவிட இயக்கங்கள் பெரியார் சீடர்கள் பார்ப்பன ஆதிக்கம் எனும் பழைய பஞ்சாங்கத்தையே புரட்டுகின்றனர்.இன்று பிராமணர் அல்லாதார் இயக்கங்கலால்தான் சாதி ஆதிக்கம் வெவ்வேறு வடிவங்களில் வளர்ந்திருக்கின்றன என்பது மறுக்கவே முடியாத உண்மை.அம்பேத்கார் கூற்றுப்படி பார்த்தாள் இன்றைய எண்ணிலடங்கா எத்தனையோ சாதிகளை உருவாக்கியவை தொடக்கக் கருப்பைகளான வணிக வைசிய வர்க்கமும் வேளாள வர்க்கமுமே ஆகும் . உண்மை அறியுங்கள் தெளிவுறுங்கள் .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.