கடலூர்: ""வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் வேண்டும் என, வலியுறுத்தி ஜாதி அமைப்புகள் அறிவித்துள்ள போராட்டத்திற்கு, தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது,'' என, இந்திய குடியரசுகட்சி மாநிலத் தலைவரும் எம்.எல்.ஏ.,வுமான, செ.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார்.
கடலூரில், அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தர்மபுரியில் நடந்த, ஜாதி மோதலுக்கு காடுவெட்டி குரு காரணம். இதே போன்று குறிஞ்சிப்பாடி அடுத்த, பாச்சாரப்பாளையத்தில் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் காரணம். இழந்து போன அரசியல் செல்வாக்கை, மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற ஆதங்கத்தோடு ராமதாஸ், சமூக மோதல்களை தமிழ்நாட்டில் உருவாக்கி வருகிறார். மேலும், அரசியல் லாபம் தேட, இதுபோன்ற பிரச்னையில் ஈடுபட்டுள்ளார். லோக்சபா தேர்தலில் அரசியல் பேரம் பேச வேண்டும் என்ற சிந்தனையோடு, ஜாதிய உணர்வுகளைத் தூண்டி விடுகிறார்.
அனைத்து அரசியல் கட்சிகள் ராமதாசுக்கு, பாடம் கற்பிக்க வேண்டும். ஜன., 4ம் தேதி, வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் வேண்டும் என வலியுறுத்தி, ஜாதி அமைப்புகள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என, வலியுறுத்துவோம். ஜாதி அமைப்புகளின் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி, தலித் அமைப்புகள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடும். இவ்வாறு, தமிழரசன் எம்.எல்.ஏ., கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.