சென்னை : அமெரிக்காவில், "ஞாலமொழிநம்பி' விருது பெற்று, சென்னைக்கு திரும்பிய, முன்னாள் தமிழக காங்., தலைவர் குமரி அனந்தனுக்கு, சத்தியமூர்த்திபவனில், காங்கிரசார் உற்சாக வரவேற்ப்பு நேற்று அளித்தனர்.
உலகம் முழுவதும், ஒரே மொழி வழக்கு மொழியாக இருக்க வேண்டும் என்பதற்காக, தமிழ் மொழியை, முதன்மையாக கொண்டு, "ஞாலமொழி' உருவாக வேண்டும் என, வலியுறுத்தி, கடந்த, 1992ம் ஆண்டு, ஐ.நா., சபையை குமரிஅனந்தன் வலியுறுத்தினார். அப்போதைய, ஐ.நா., பொதுச்செயலர், இந்தியா தான், முதல் முயற்சி எடுக்க வேண்டும் என, குமரி அனந்தனுக்கு கடிதம் எழுதினார். அதற்காக, மீண்டும் அமெரிக்கா சென்ற, குமரி அனந்தனுக்கு, நியூயார்க் தமிழ்ச்சங்கம், "ஞாலமொழி நம்பி' என்ற விருதை அளித்தது.
அவ்விருதை பெற்று, சென்னை திரும்பிய குமரி அனந்தனுக்கு, காங்கிரசார் நேற்று, உற்சாக வரவேற்பு அளித்தனர். சத்தியமூர்த்தி பவனில் உள்ள காமராஜர் உருவப்படத்திற்கு, குமரி அனந்தன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் பிரமுகர்கள், பலர் கலந்து கொண்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.