சென்னை: சென்னை பல்கலைக்கழக, இளங்கலை தொலைதூர படிப்பிற்கான தேர்வுகள், வரும் 13ம் தேதி துவங்குகிறது. சென்னை பல்கலை, தொலைதூர கல்வி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும், பி.ஏ., - பி.காம்., - பி.பி.ஏ., - பி.சி.ஏ., உள்ளிட இளங்கலை படிப்புகளுக்கான தேர்வுகள், வரும் 13ம் தேதி துவங்கி, ஜனவரி 5ம் தேதி வரை நடக்கிறது. வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், இளங்கலை தேர்வுகள் நடக்க உள்ளன. தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, தேர்வு அட்டணையும், தேர்வு நடைபெறும் மையங்கள் குறித்த முழு தகவல்களும், தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை, தேர்வு நடைபெறுவதற்கு மூன்று நாள்களுக்கு முன், தேர்வு மையத்தில் பெற்று கொள்ளலாம். சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவன இணையதளமான, www.ideunom.ac.in என்ற முகவரியிலிருந்தும், ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.