பட்டியல் இன்று வெளியீடு :
இறுதி தேர்வுப் பட்டியலில் தேர்வு பெற்றவர்களின் பெயர் விவரங்கள், டி.ஆர்.பி.,யின், தீதீதீ.tணூஞ.tண.ணடிஞி.டிண என்ற இணையதளத்தில், இன்று மாலைக்குள்அமாவாசை நாளில் விழா:
அதிக எண்ணிக்கையில் தேர்வு பெற்றிருக்கும் ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் விழாவை, விமரிசையாக நடத்த, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அமாவாசை நாளான, 13ம் தேதி, விழா நடக்கும் எனவும், அதில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று, தேர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவுகளை வழங்குவார் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.இறுதிப் பட்டியல் வெளியான உடன், பாட வாரியாக உள்ள காலி இடங்கள் விவரங்களை சரிபார்த்து, "ஆன்-லைன்' வழியாக, கலந்தாய்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் பணி நியமன உத்தரவு வழங்கும் விழாற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றை செய்யுமாறு, பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில், விழாவை நடத்தி, பணி நியமன உத்தரவை வழங்க வேண்டியிருப்பதால், அதிகாரிகள் மின்னல் வேகத்தில், அதற்கான வேலைகளில் இறங்கி உள்ளனர்.10 ஆயிரம் இடங்களுக்கு தகுதியானவர்கள் இல்லை :
இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரை, 10 ஆயிரம் பேர், தேர்வு செய்யப்பட வேண்டும்; ஆனால், 9,664 பேர், தேர்வு பெற்றுள்ளனர். பட்டதாரி ஆசிரியர், 19 ஆயிரத்து 432 பேர் தேவை;டி.ஆர்.பி., சாதனை:
வெறும், 15 ஊழியர்களுடன் இயங்கி வரும், டி.ஆர்.பி., ஜூலை மற்றும் அக்டோபரில், 15 லட்சம் பேருக்கு, தேர்வை நடத்தி, பல்வேறு பணிகளுக்குப் பின், இறுதி தேர்வுப் பட்டியலை, எவ்வித சிக்கலும் இல்லாமல் வெளியிட்டு, சாதனை படைத்தது. இதற்காக, டி.ஆர்.பி., தலைவர் சவுத்ரி முதல், கடைநிலை ஊழியர் வரை, அனைவரும், அரசு விடுமுறை நாட்களிலும், இரவு, 12:00 மணி வரையிலும் வேலை பார்த்ததாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.-நமது நிருபர்-வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தேர்வானவர்களுக்கு வாழ்த்துகள், வெறும் 15 நபர்களை மட்டும் வைத்து கொண்டு சில லட்சம் தேர்வாளர்களில்18 ஆயிரம் தேர்வாளர்களை தேர்வு செய்யும் திறன் படைத்த TRB க்கு, TET தேர்வுக்கு முன்னர் நடைபெற்ற பிற (Engineering college TRB(பணி நியமனம் வழங்கபடவில்லை ) , Polytechnic TRB (பணி நியமனம் வழங்கபடவில்லை ) , PG TRB ) தேர்வு முடிவுகளை வெளியிட முடியாமல் களம் தாழ்த்துவது ஏனோ ?
தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் திறமைசாலிகள் அல்ல படித்து உடனே வேலை கொடுக்கும் இந்த அரசு ஏன் செர்டிபிகாடே verification செய்த 2010 மே மாதம் 10,000 இக்கு மேற்பட்டோர் இருக்கிறார்கள் இவர்கள் 5 வருடம்
அனுபவம் மேலும் seniority வேறு ஏன் வேலை கொடுக்க முற்படவில்லை? இவர்கள் அனைவரையும் எடுத்தால் பற்றாக்குறை இருக்காது

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.