Dark and Dark surrounded place- Tamil Nadu; Comments spread in Facebook | "இருள், இருள் சார்ந்த இடம் தமிழகம்': "பேஸ் புக்'கில் பரவும் விமர்சனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

"இருள், இருள் சார்ந்த இடம் தமிழகம்': "பேஸ் புக்'கில் பரவும் விமர்சனம்

Added : டிச 04, 2012 | கருத்துகள் (100)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
"இருள், இருள் சார்ந்த இடம் தமிழகம்':

மின்வெட்டு குறித்து, ஐவகை நிலத்துடன், தமிழகத்தை ஒப்பிட்டு, "பேஸ்புக்'கில் உலா வரும் விமர்சனத்துக்கு, பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் மட்டுமின்றி, வீட்டில் உள்ளவர்கள், வேலைக்கு செல்வோர் என, பல தரப்பினரும், "பேஸ்புக்' உள்ளிட்ட வலைதள நண்பர்கள் மூலம், தங்களுக்குள் கருத்து பரிமாறிக் கொள்வது அதிகரித்துள்ளது. இதற்கான வாய்ப்பில்லாதவர்கள், மொபைல்போன், எஸ்.எம்.எஸ்., மூலம், தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர்."பேஸ்புக்' உள்ளிட்ட வலைதளங்களில், அரசியல் பிரபலங்கள், நாட்டு நடப்பு பற்றி விமர்சிப்பது, இளைஞர்களிடம் வரவேற்பு பெறும் அளவு, பலத்த சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை, பூதாகரமாக உள்ளது. மின்வெட்டு குறித்து, எஸ்.எம்.எஸ்., மூலம், பல விமர்சனங்கள் உலா வருகின்றன. அது போல, "பேஸ் புக்'கில், ஐவகை நிலத்துடன் தமிழகத்தை ஒப்பிட்டு, மின்வெட்டு குறித்து வெளியாகி உள்ள விமர்சனம், பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.ஒரு வரைபடத்தில், "மலை, மலை சார்ந்த இடம், குறிஞ்சி; காடு, காடு சார்ந்த இடம், முல்லை; வயல், வயல் சார்ந்த இடம், மருதம்; கடல், கடல் சார்ந்த இடம், நெய்தல்; மணல், மணல் சார்ந்த இடம், பாலை; இருள், இருள் சார்ந்த இடம் தமிழ்நாடு' என, முதல்வர் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி படம் உள்ளது.இது, மின்வெட்டால் புழுங்கித் தவிக்கும் மக்களின் விமர்சனமாக இருப்பதால், பலரிடமும் வரவேற்பு பெற்றுள்ளது.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (100)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SARAVANAN - paganeri,sivagangai,இந்தியா
09-டிச-201211:44:36 IST Report Abuse
SARAVANAN ஜெ ஒன்றரை ஆண்டு ஆட்சியை முடித்து விட்டார் . மின்வெட்டு இன்னும் அதிகரித்துகொண்டே போகிறது இன்னும் தி மு க வையே குறை சொல்லாதீர்கள் அ தி மு க சொம்புகளே. பார்லிமென்ட் தேர்தலில் 40 ம் உமதே வாழ்க வளமுடன் .
Rate this:
Share this comment
Cancel
வாசுதேவன் - Doha,இந்தியா
06-டிச-201201:22:44 IST Report Abuse
வாசுதேவன் அந்த போட்டோ சூப்பர். ஜெயா , மஞ்சள் துண்டாரை பார்த்து நக்கலாக சிரிப்பதும், அதற்கு அவர் ஒரு மார்க்கமாக நகைப்பதும்....
Rate this:
Share this comment
Cancel
ashok - madurai,இந்தியா
05-டிச-201219:00:10 IST Report Abuse
ashok நன்று
Rate this:
Share this comment
Cancel
suresh - கோயம்புத்தூர் ,இந்தியா
05-டிச-201218:08:16 IST Report Abuse
suresh எல்லாம் காலக் கொடுமை.
Rate this:
Share this comment
Cancel
Raj - DOHA,கத்தார்
05-டிச-201217:57:01 IST Report Abuse
Raj dear sekar how many years required to solve this issue. in this two years you mam how many new projects started. any action taken to start new project.dont blame always karunanithi. he started so many new projects for 7000 MW your madem waiting for that on only. so again and again dont blame former CM.first think in this two years how many development project started, what is the comodities prices, what is the people living standard, what is the industralist problem, so control yourself and accept tamil nadu people are facing lot of problem in somany ways.so one time you visit tamilnadu and say your honest comments.
Rate this:
Share this comment
Cancel
Raj - DOHA,கத்தார்
05-டிச-201217:47:38 IST Report Abuse
Raj i like anwar comment
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
05-டிச-201216:13:34 IST Report Abuse
தமிழ்வேல் அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெறியவில்லை...
Rate this:
Share this comment
Cancel
Mohi - Chennai,இந்தியா
05-டிச-201215:40:49 IST Report Abuse
Mohi சரியான கருத்துக்களை தெரிவிக்காமல் மீண்டும் மீண்டும் திமுக மீது பழி சுமத்திக்கொண்டு இப்போது உள்ள மின் பிரச்சினையை மறைக்கப்பார்ப்பது ஆளும் கட்சியின் அசாதாரண போக்கை அதிகப்படுத்துவதர்க்கான முயற்சிதான். இந்த பிரச்சினைக்கு அதிமுக சொம்புகள் கருத்து தெரிவிக்காமல் இருந்தாலே நாட்டிற்க்கு சிறிய நன்மைதான்.
Rate this:
Share this comment
Cancel
Appavi Tamilan - London,யுனைடெட் கிங்டம்
05-டிச-201215:38:21 IST Report Abuse
Appavi Tamilan தமிழகம் உலகிலேயே சிறந்த மாநிலமாக முன்னேற அயராது உழைக்கும் ஜெயாவை யாரும் கேள்வி கேட்காதீர்கள்.....இதுக்கு திமுக காரணம், மத்திய அரசு காரணம், அமெரிக்கா காரணம், பாகிஸ்தான் காரணம், ரஷ்யா காரணம், ஐநா சபை காரணம்...நூறாண்டு சாதனையை ஓராண்டில் அளித்த ஜெயா பாவம். அவருக்கும் மின்வெட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட மின்திட்டங்களை செயல்படுத்தாமல் எங்கள் பு.தலைவி சாதனை செய்திருக்கிறார்....மத்திய அரசிடம் நல்லுறவை வளர்த்து கூடுதல் மின்சாரம் பெறாமல் எங்கள் பு.தலைவி தலை நிமிர்ந்து நிற்கிறார். சென்னைக்கு மட்டும் 2 மணி நேரம் மின்வெட்டு அளித்து தொழில் நகரங்களான கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற நகரங்களில் 16 மணி நேரம் மின்வெட்டு அளித்து தொழில் துறை முன்னேற எங்கள் பு.தலைவி சூளுரைத்துள்ளார்...மேலும் புதிதாக எந்த மின்திட்டமும் எங்கள் தங்கத்தலைவி துவங்கி வீண் செலவு செய்யாமல் சாதனை புரிந்திருக்கிறார். இன்று 5-6 மணி நேரம் தமிழகத்தில் மின்சாரம் இருப்பதற்கு ஜெயாதான் காரணம்..மேலும் 16 நேரம் மின்வெட்டு சாதனையை 24 மணி நேரமாக அதிகரிக்க இரவு பகல் பாராமல் எங்கள் தலைவி உழைத்து வருகிறார். விவசாயிகளுக்கு மின்சாரம் தருவது தவறு என்று உணர்ந்து, சட்டமன்ற வைர விழாவை பகலில் கொண்டாடாமல் இரவில் கொண்டாடி அதற்காக மின்சாரத்தை செலவு செய்து தமிழகத்திற்கு பெரும் புகழ் சேர்த்திருக்கிறார்... யாரேனும் அரசை பற்றியோ, அல்லது தேவைகளையோ அல்லது அரசின் குறைகளையோ தெரிவித்தால் அதற்காக பொய் வழக்குகளில் கவனம் செலுத்தி தமிழக அரசு நிதியை அறிவுப்பூர்வமாக செலவு செய்துவரும் எங்கள் தங்கத்தலைவி, இப்போது இணைய வலைதளங்களில் அவ்வாறு கருத்து தெரிவிப்போரையும் கைது செய்து அவர்கள் மேல் பொய்வழக்கு போட்டு தமிழக மக்களின் வரிப்பணத்தை மிக சரியாக செலவு செய்ய தன் அமைச்சரவையை கூட்டி ஆலோசனை செய்து வருகிறார்...ஆகவே வரும் எல்லா தேர்தல்களிலும் எங்கள் தலைவியை முதல்வராக தேர்வு செய்யுங்கள்...மேலும் தமிழகம் கடந்த 2 ஆண்டுகளில் எவ்வாறு முன்னேற்றம் அடைந்துள்ளதோ அதுபோல இந்தியாவும் முன்னேறவேண்டும் என்றால் எங்கள் தலைவி பிரதமராக வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
Raja Paandian - Kuala Lumpur,மலேஷியா
05-டிச-201215:36:09 IST Report Abuse
Raja Paandian வாழ்க ஜனநாயகம் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை