புதுக்கோட்டை: சிவகங்கை அருகே நடந்த அ.தி.மு.க., பிரமுகர் உட்பட, 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய மேலும், இருவர் நேற்று புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சிவகங்கை மாவட்ட, அ.தி.மு.க., மாணவரணிச் செயலாளர் கதிரேசன், இவரது மகன் பிரசன்னா, கார் டிரைவர் பூமிநாதன் ஆகியோர், கடந்த மாதம், 14ம் தேதி கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய, சிவகங்கை மாவட்டம், பெரிய கண்ணனூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அர்ச்சுனன் மகன் அக்னிராஜ், மலைராஜ் மகன் யோகனாதன், அக்னிபாண்டி மகன் சத்தியராஜ் ஆகியோர் கடந்த, 29ம் தேதி புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை, 15 நாள் காவலில் வைக்க நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டதை தொடர்ந்து, மூன்று பேரும் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அதே கொலை வழக்கில் தொடர்புடைய, சிவகங்கை மாவட்டம் பெரிய கண்ணனூர் பகுதியைச் சேர்ந்த ராமனாதன் மகன் பால்பாண்டி, 28, செல்வம் மகன் சிவகுமார், 26, ஆகியோர் நேற்று புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை, 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.