Norway court jails Indian parents in 'child abuse' case | நார்வேயில் ஆந்திர தம்பதிக்கு ஒன்றரை ஆண்டு சிறை| Dinamalar

நார்வேயில் ஆந்திர தம்பதிக்கு ஒன்றரை ஆண்டு சிறை

Updated : டிச 05, 2012 | Added : டிச 04, 2012 | கருத்துகள் (26)
Advertisement
ஆந்திர தம்பதிக்கு ஒன்றரை ஆண்டு சிறைNorway court jails Indian parents in 'child abuse' case

ஆஸ்லோ :நார்வே நாட்டில், மகனை கண்டித்ததற்காக, கைது செய்யப்பட்ட, சிறுவனின் தந்தைக்கு , ஒன்றரை ஆண்டு சிறை தண்டனையும், தாய்க்கு 15 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்தவர் சந்திரசேகர்; நார்வே நாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவரது மனைவி அனுபமா. இவர்களது ஏழு வயது மகன், ஆஸ்லோ நகர் பள்ளியில் படிக்கிறான். சமீபத்தில் இவர்களது மகன், பள்ளியில், பேன்ட்டிலேயே, சிறுநீர் கழித்து ஈரமாக்கிக் கொண்டான். இதற்காக சந்திரசேகர், மகனை கண்டித்துள்ளார். மறுநாள், பள்ளியிலிருந்து ஒரு பொம்மையை எடுத்து வந்து விட்டான். இதனால் கோபமடைந்த சந்திரசேகர், "இது போன்று செய்தால், உன்னை, ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பி விடுவேன்' என, மிரட்டியுள்ளார்.இந்த விஷயத்தை சிறுவன், தன் பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்துள்ளான். சிறுவனை, அவனது பெற்றோர் தொடர்ந்து கொடுமைப்படுத்துவதாக ஆசிரியை, போலீசில் புகார் செய்துள்ளார்.
சமீபத்தில், இந்தியா வந்த சந்திரசேகர் தம்பதியர், மகனை, ஐதராபாத்தில், உறவினர் வீட்டில் விட்டு சென்று விட்டனர்.நார்வே திரும்பிய, சந்திரசேகரையும், அவரது மனைவியையும், அந்நாட்டு, போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து நார்வே, போலீஸ் அதிகாரி குர்த் லிர் குறிப்பிடுகையில், ""சிறுவனின் உடலில், சூடு வைத்த காயமும், பெல்ட்டால் அடித்த தழும்பும் உள்ளது. இதை வைத்து பார்க்கும் போது, சந்திரசேகர் தம்பதியர், மகனை அதிகமாகவே கொடுமைப்படுத்தியது தெரியவந்துள்ளது. எனவே, தான் அவர்களை கைது செய்துள்ளோம்,'' என்றார்.

ஆஸ்லோ மாவட்ட கோர்ட்டில், ஆஜரான அரசு தரப்பு வக்கீல்கள், சந்திரசேகருக்கு, 18 மாத சிறை தண்டனையும், அனுபமாவுக்கு, 15 மாத சிறை தண்டனையும் அளிக்கும் படி பரிந்துரைத்தனர். இதனை ஏற்ற நீதிபதிகள், அரசு தரப்பினர் கோரிய தண்டனையை அளித்து தீர்ப்பு கூறினர்.

ஆஸ்லோ மாவட்ட கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்வதற்கு, தூதரகத்தின் சார்பில், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Susil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-டிச-201222:30:10 IST Report Abuse
Susil மகனை யாரிடமோ விட்டு வெறும் பணத்தை மட்டுமே குறியாய் கொண்டு வேலைக்கு சென்ற இவர்களுக்கு இது தேவைதான்.
Rate this:
Share this comment
Cancel
Thamilan-indian - madurai,இந்தியா
05-டிச-201214:50:15 IST Report Abuse
Thamilan-indian கண்ட கண்ட காட்டுமிராண்டி நாடுகளுக்கு பணத்திற்காக வேலைக்கு செல்வது இப்படிதான் முடியும். காட்டுமிராண்டிகளிடம் காப்பியடித்த இந்திய அரசியல் சட்ட அரசுகளுக்கு இது ஒன்றும் பெரிதாக தோன்றுவதில்லை.
Rate this:
Share this comment
Ivar Shan - Oslo,நார்வே
06-டிச-201205:10:47 IST Report Abuse
Ivar Shanஅண்ணே நீங்க தமிழா?? காட்டுமிராண்டிகளுக்கு நோர்வேயில் இடமில்லை தண்டனை முடிந்ததும் சொந்த நாட்டிற்கு அனுப்பினால் நல்லது. ஏழு(7 )வயது குழந்தையின் நாவில் கரண்டியால் சூடுவைத்தவன் காட்டுமிராண்டியா? அவனைத்தண்டித்தது காட்டுமிரண்டித்தனமா.???...
Rate this:
Share this comment
Cancel
sundar the great - chennai  ( Posted via: Dinamalar Android App )
05-டிச-201212:45:22 IST Report Abuse
sundar the great thats good goverment.....but my india is the greatest country in the world.....
Rate this:
Share this comment
Cancel
R.Saminathan - mumbai,இந்தியா
05-டிச-201212:26:34 IST Report Abuse
R.Saminathan இந்த விஞ்ஞான காலத்துல புள்ளைங்கள கண்டிக்க கூடாது,அன்பால மட்டுமே அவர்களை அடக்க முடியும்.
Rate this:
Share this comment
Cancel
Tirupur Truth - tirupur,இந்தியா
05-டிச-201212:00:22 IST Report Abuse
Tirupur Truth தண்டனை கொஞ்சம் அதிகம் தான்,.இருந்தாலும் 7வயது சிறுவனை இப்படி கொடுமைப்படுத்துவது மிகப்பெரிய பாவம்... அதன் பலனை தான் அனுபவிக்கிறார்களோ? என்னவோ ?
Rate this:
Share this comment
Cancel
Shanmugam - Auckland,நியூ சிலாந்து
05-டிச-201210:40:52 IST Report Abuse
Shanmugam ஏன் அவர்கள் தங்களது மகனை இந்தியாவில் விட்டு விட்டு இருவரும் செல்லவேண்டும்? தாயார் மகனுடன் இந்தியாவில் இருந்திருக்க வேண்டியது தானே? என்னமோ சரியாய் தெரியலை
Rate this:
Share this comment
Cancel
parvathy kanthi - Toronto,கனடா
05-டிச-201209:41:06 IST Report Abuse
parvathy kanthi 7 வயது சிறுவனின் மன நலமும், உடல் நலமும் பாதிக்கும் அளவு தொடர்ந்து கணவன், மனைவி இருவரும் கொடுமை படுத்தயுள்ளனர் (made for each other போல) அதனால் தான் தீர்ப்பும் கொஞ்சம் கடுமையாக உள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு போனால் கூட, திருந்தாத ஜென்மங்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் , தனக்கு மட்டும் தான் அறிவு வுள்ளது போலவும், மற்றவர்கள் அனைவரும் முட்டாள் மாதிரியும், மேலும், தேவையில்லாது எல்லாம் செய்து, தான், ஒரு வடிகட்டின முட்டாள் தான் என்பதை நிரூபணம் செய்வார்கள். கண்டிப்பாக, வெளிநாட்டில், நன்கு அந்தநாட்டின் சட்ட திட்டங்களை தெரிந்து கொண்டு, அதற்கு உரிய மரியாததை கொடுக்கவில்லை என்றால், இப்படித்தான் கேவலப்பட வேண்டும். இது அனைவருக்கும் பொருந்தும்.
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
05-டிச-201209:20:01 IST Report Abuse
N.Purushothaman ஆசிரியை அவசரபடாமல் பெற்றோரை அழைத்து பேசி இருக்கலாம்.....அதில் உடன்பாட்டுக்கு வராமல் இருந்திருந்தால் கண்டித்து இருக்கலாம்....அதை விடுத்து ஒன்றரை வருடம் சிறை வாசம் நம்மை பொறுத்தவரை அதிகம் தான்....பெற்றோரும் மற்றொரு நாட்டில் இருக்கும் போது அந்நாட்டிர்கேற்ற சட்டங்களை அணுசரித்து நடந்தால் நல்லது...தன் பிள்ளை மீதுள்ள அதீத பாசம் ,மற்றும் ஒழுக்கமுள்ள மாணவனாக அவன் வளர வேண்டும் என்கிற எண்ணமே அவர்களை கண்டிக்க தூண்டி உள்ளது...கண்டித்தது தவறு இல்லை....கண்டித்த விதம் தான் தவறு.....நீதிமன்றமாவது அவர்களை கண்டித்து நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்க வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
MrBoy - India,இந்தியா
05-டிச-201209:03:00 IST Report Abuse
MrBoy பிள்ளைகளை கண்டிப்பது தப்பில்லை... ஆனால் கண்டிக்கும் வரைமுறையை கற்றுக்கொள்ள வேண்டும்.. முக்கியமாய் வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் நண்பர்கள், வெறுமனே அந்த நாட்டின் கரென்சி இன்னிக்கு என்ன ரேட் போகுது என்பதை பற்றி தினமும் யோசிக்கும் அதே வேலையில்.. முதலில் அந்த நாட்டின் சட்ட திட்டங்களை பற்றியும் கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும்... நாட்டுக்கு நாடு ..ஊருக்கு ஊரு இது மாறுபடும்... ஜப்பானில் குழந்தைகளை கண்டிக்கும் விதமே வேறு, அம்மாவும் அப்பாவும் தப்பு செய்த குழந்தைகளின் முன்னாடி முட்டி போட்டு உக்கார்ந்து தங்கள் கண்களை நோக்கசொல்லி செய்த தவறை எடுத்து சொல்லி ... அவ்வாறு செய்தால் நடக்கும் விளைவுகளை சொல்லி, புரியவைத்து வார்த்தைகளாலும், சொற்களாலும் திருத்துவார்... நம்ம ஊரு குழந்தைகள் கொஞ்சம் ஓவரா தான் சேட்டை செய்யும், அதற்க்காக பெல்ட்டால் அடிப்பது .. சூடு வைப்பது போன்ற தண்டனைகள் கொஞ்சம் ஓவர்... இது பெற்றோரின் அறியாமையையும் .. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதையுமே காட்டுகிறது ... இதே பெற்றோர்கள் தங்களின் கோவத்தை .. கால காலமாய் தவறு செய்யும் அரசியல் அரக்கர்களிடத்தில் காண்பித்தால் நல்லது .
Rate this:
Share this comment
Cancel
Karthi - Kerala,இந்தியா
05-டிச-201208:57:58 IST Report Abuse
Karthi புடிங்க சார், புடிச்சு ஜெயில்ல போடுங்க சார், பெத்த பிள்ளையையே சூடு வச்சு கொடும படுத்திருக்காங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை