இந்திய பல் மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி, பி.டி.எஸ்., தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்க கோரி, முதல்வர் தனிப் பிரிவில், மனு அளிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தேர்வு மதிப்பீட்டு முறையில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக் கழகம், புதிய விதிமுறையை அமல்படுத்தியது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், மருத்துவ மாணவர்களுக்கு சாதகமாக, நவ., 26ம் தேதி தீர்ப்பு வந்தது. இதையடுத்து, அன்று மாலையே, இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி, எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கான, திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதேபோல், பி.டி.எஸ்., தேர்வு முடிவுகளை, இந்திய பல் மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி வெளியிட, நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு பல் மருத்துவ மாணவர் கூட்டமைப்பு நிர்வாகிகள், முதல்வர் தனிப்பிரிவில், நேற்று மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து, கூட்டமைப்பின் பொதுச் செயலர் அருளப்பராஜ் கூறியதாவது: இந்திய பல் மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி, பி.டி.எஸ்., தேர்வு முடிவுகள், மீண்டும் வெளியிடப்படும் என, நவ., 27ம் தேதி, பல்கலை நிர்வாகம், கோர்ட்டில் தெரிவித்தது. இதுநாள் வரை, திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். "இந்த வார இறுதிக்குள், பி.டி.எஸ்., தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்' என, பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.