புதுடில்லி :"கர்நாடகாவுக்கு, 8 லட்சம் ஏக்கர் பரப்பிலான விவசாயத்துக்கு தான், காவிரி நீரை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், 11 லட்சம் ஏக்கர் விவசாயத்துக்கு தேவையான நீரைப் பயன்படுத்தி விட்டது' என, சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும், காவிரி நதி நீர் தொடர்பான வழக்கு விசாரணையில், தமிழக அரசு, புகார் தெரிவித்தது.
காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, தமிழகம் மற்றும் கர்நாடகா அரசுகளுக்கு இடையே, நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வருகிறது. இரண்டு மாநிலங்களுமே, இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன.சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, இரு மாநில முதல்வர்களும், சமீபத்தில் பேச்சு நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. "ஒரு சொட்டு தண்ணீரை கூட, தமிழகத்துக்கு திறந்து விட முடியாது'என, கர்நாடகா தெரிவித்து விட்டது. இந்த விவரத்தை, மனு மூலமாக, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள், டி.கே.ஜெயின், மதன் பி லோகூர் தலைமையிலான பெஞ்ச் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், தன் வாதத்தில் கூறியதாவது:காவிரி நீரை பயன்படுத்துவது தொடர்பாக, காவிரி நதி நீர் தீர்ப்பாயம், ஏற்கனவே ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன்படி, 8.4 லட்சம் ஏக்கர் பரப்பிலான விவசாயத்துக்கு மட்டுமே, அணைகளில் உள்ள தண்ணீரை பயன்படுத்த, கர்நாடகாவுக்கு, தீர்ப்பாயம் அனுமதி அளித்திருந்தது.ஆனால், கர்நாடகா அரசு, தற்போது, 11.6 லட்சம் ஏக்கர் விவசாயத்துக்கு, காவிரி நீரை பயன்படுத்தியுள்ளது. இந்தாண்டு, போதிய தண்ணீர் இல்லாததால், தமிழகத்தில், குறுவை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டது.தற்போது சம்பா சாகுபடியும், தண்ணீரில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இதை காக்க, காவிரியில் தமிழகத்துக்குரிய பங்கை, கர்நாடகா திறந்து விட வேண்டும்; ஆனால், இதுவரை திறந்து விடவில்லை. பருவமழை குறைபாட்டால், கர்நாடகாவில், விவசாயத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தமிழகத்துக்கு தான், பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவின் நான்கு அணைகளில் உள்ள, காவிரி நீர் முழுவதையும், கர்நாடகா பயன்படுத்தும்போது, தமிழகத்துக்கு அதிலிருந்து சிறிதளவு நீரைக் கூட, திறந்து விட மறுப்பது, நியாயமற்ற செயல். தமிழகத்தில், ஒரு போக விளைச்சல் கூட, நடக்கவில்லை. ஆனால், கர்நாடகாவில் மட்டும், அடுத்தடுத்த விளைச்சல்களுக்கு, தண்ணீரை பயன்படுத்துகின்றனர். தமிழகத்தின் சாகுபடி, பாதிக்கப்பட வேண்டும்; கர்நாடகாவின் சாகுபடி தொடர வேண்டும் என நினைப்பது, சரியான செயல் அல்ல.இவ்வாறு தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் கூறினார்.
இதைத் தொடர்ந்து, கர்நாடகா சார்பில் ஆஜரான, மூத்த வக்கீல், அனில் திவான், தன் வாதத்தில் கூறியதாவது:காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, பிரதமர் தலைமையிலான, காவிரி நதி நீர் ஆணையம், தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் ஆய்வு செய்து, ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், அந்த உத்தரவை மீறி, தமிழக அரசு சார்பில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.இந்த பிரச்னையை, உணர்வுப் பூர்வமானதாகவும், இரக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், தமிழக அரசு மாற்ற முயற்சிக்கிறது. இதை, அனுமதிக்க கூடாது. இது, இரு மாநில விவசாயிகள் தொடர்பான பிரச்னை. இதை கவனமாக கையாள வேண்டும்.இவ்வாறு அனில் திவான் வாதாடினார்.
இந்த வழக்கு தொடர்பான வாதம், இன்றும் தொடரவுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த பிரச்சனை கி. பி. 1200 ஆண்டு முதல் உள்ளது. 8 இலட்சம் ஹெக்டேர் பயிர் நிலத்தை 11 இலட்சமாக கர்நாடக காரர்கள் மாற்றி உள்ளார்கள். நாம் 10 இலட்சத்தை 5 இலட்ச ஹெக்டேராக மாற்றியுள்ளோம். ஆதலால் தான் பழைய ராஜாக்கள் நிறைய குளம், ஏரி, குட்டை என தண்ணீரை தேக்கிவைக்க கட்டினார்கள். அதோடு ஒரு குளத்திற்கும் மற்றொரு குளத்திற்கும் தண்ணீர் போக வாய்கால் வெட்டினார்கள். நாம என்ன செய்தோம். குளத்தை மூடி பஸ் ஸ்டாண்ட், வீடும், வாய்காலை சாக்கடையாகவும் தான் மாற்றினோம். 1965 (என் தந்தை சொன்னது) முன் மாரமத்து செய்த தானாம் அதன் பின் மராமத்து என்று காசை ஆட்டே செய்துட்டார்களாம்.
இதிலே கர்னாடகாரன் தப்பு என்ன. ஏன் குளத்தை, ஏரியை தூர்வாரவில்லை என யாரவது போராட்டம் பண்ணினார்களா? தப்பு யாரிடம். மக்களை பற்றி நினைப்பவனுக்கு நல்லது செய்யதான் தூண்டும். திருட வேண்டும் என நினைப்பவனுக்கு எப்போதும் திருடத்தான் தோன்றும் நல்ல வேலை நடக்காது. எல்லோரும் காமராஜர், கக்கன் போலில்லை.
அடுத்த வருட சாகுபடிகாவது தீர்ப்பு சொல்லுவாங்களா ?.. . . .. தீர்ப்பு .ஒரேடிய இருக்கணும் . . . . .தண்ணீர் குடுகலேயன்ன. . . .நிபுணர் குழு உதவியுடன் மழை அளவை பொருத்து ஆராய்ந்து. .அணைகளை இராணுவத்தின் பொறுப்பில் விட்டுவிட்டு . . .அந்தந்த மாநிலத்துக்கு உரிய பங்கை. . . . அளிக்க வேண்டும் .. .வெறும் சாதாரண தீர்ப்பு இந்த வழக்குக்கு ஒத்துவராது . . . .புதிய அணுகுமுறை தேவை . . . .
:"கர்நாடகாவுக்கு, 8 லட்சம் ஏக்கர் பரப்பிலான விவசாயத்துக்கு தான், காவிரி நீரை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், 11 லட்சம் ஏக்கர் விவசாயத்துக்கு தேவையான நீரைப் பயன்படுத்தி விட்டது&39 - இது மாதிரி வாதங்களை என்றாவது தமது தலைவர் ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த போது வைத்தாரா ??? அவர்கள் தங்கள் விவசாய பகுதிகளை அதிகரிக்கும் போது தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வரத்து குறைந்து கொண்டே இருக்கும். இது தெரிந்தும் சும்மா வாளா இருந்ததேன் ??? இவர் மத்திய அரசில் பத்து வருடங்களாம் பங்கு பெற்றது எதற்கு ??? ஆட்டையை போட மட்டும் தானா ??? என்றாவது தமிழகத்துக்காக மத்திய மாநில ஆட்சியில் இருக்கும் போது தகுந்த நடவடிக்கை காவிரிக்காகவும் முல்லை பெரியாருக்காகவும் ஆந்திர கிருஷ்ணா நதிக்காகவும் எடுத்தாரா ??? கேட்டால் அச்சு எனது நண்பன் எடி எனது தம்பி நாயுடுவும் ரெட்டிகாருவும் சொந்தங்கள் என்று பீலா விடுவது. இவர்கள் எல்லாம் இந்த மனுஷனுக்கு தன் குடும்ப தொழிலை கவனிக்கத்தான் வேண்டும். தமிழ்நாடு குட்டி சுவரா போனா வேடிக்கை தான் பார்த்து கொண்டிருப்பார்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.