Congress manifesto promises 'real' development and 'safety' | குஜராத்தில் நிஜ வளர்ச்சிக்கு உறுதி: 16 அம்ச காங்., தேர்தல் அறிக்கை | Dinamalar
Advertisement
குஜராத்தில் நிஜ வளர்ச்சிக்கு உறுதி: 16 அம்ச காங்., தேர்தல் அறிக்கை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ஆமதாபாத்:"குஜராத்தில், ஆட்சிக்கு வந்தால், பாதுகாப்புடன் இணைந்த உண்மையான வளர்ச்சியை தருவோம்' என, தேர்தல் அறிக்கையில், காங்கிரஸ் கட்சி உறுதியளித்துள்ளது.

குஜராத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் பரபரப்பை எட்டியுள்ளது. நேற்று முன்தினம், முதல்வர் நரேந்திர மோடி, பா.ஜ., தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தன் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், என்ன என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது குறித்த, 16 அம்ச திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதில், முக்கிய சில அம்சங்கள் வருமாறு:
* சாதாரண மனிதனின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
* மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
* குறைந்த விலையில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்களுக்கு வீடுகள் வழங்கப்படும்.
* பெட்ரோல், டீசலுக்கான வாட் வரி குறைக்கப்படும்.
* மோடி தலைமையிலான பா.ஜ. அரசு, கடந்த, 10 ஆண்டுகளில், மாநில நிதி நிலைமையை மோசமாக்கி கடனில் தள்ளியுள்ளது. இதையடுத்து, நிதி நிலைமைøயை வலுப்படுத்தும் வகையில், நிதி கமிஷன் அமைக்கப்படும்.
* உள்ளூரை சேர்ந்த வேலையில்லாத இளைஞர்களுக்கு, வேலை அளிக்கும் வகையில், வேலை உத்தரவாத திட்டம் அமல்படுத்தப்படும்.
* விவசாயிகளுக்கு, இடையூறின்றி, 16 மணி நேரம் மின் சப்ளை அளிக்கப்படும்.
* 18 ஆயிரம் கிராமங்களில், சூரிய மின் சக்தி மூலம் தெரு விளக்குகள் அமைக்கப்படும்.
*18 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு பாசன வசதி செய்து தரப்படும்.
* உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு உள்ள, 33 சதவீத ஒதுக்கீட்டை, 55 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* அரசு ஊழியர்களுக்கு ஆறாவது சம்பள கமிஷனின் பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Skv - Bangalore,இந்தியா
06-டிச-201206:48:54 IST Report Abuse
Skv வலுவான எதிர்கச்சியே இல்லே என்பதுதான் முக்கிய காரணம், கட்சி ஆரம்பிப்போர் எப்படி துட்டு சேர்க்கலாம்னே என்றதால் வரும் விளைவு
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Rajasekar - New Delhi,இந்தியா
05-டிச-201217:39:16 IST Report Abuse
Rajasekar இப்ப குஜராத்தில் பொய்யான வளர்ச்சி (மக்கள் வளர்ச்சி) நடந்து கொண்டு இருக்கிறது.... காங்கிரஸ் க்கு ஓட்டு போட்டால் நிசமான வளர்ச்சி (காங்கிரஸ் வளர்ச்சி) ஏற்படும்... காமன்வெல்த்தில் டெல்லி வளர்ந்ததைபோல என்று திருமதி ஷீலாதீட்சித் கூறுகிறார்.... அந்தம்மா முகத்த பாருங்க இவ்வளவு பொய்ய ஒரே நாள்ல இன்னகிதான் சொல்லிருக்காங்க போல தெரியுது...
Rate this:
6 members
0 members
9 members
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
05-டிச-201216:47:04 IST Report Abuse
Narayan 125 வருஷமா என்ன கிளிச்சீங்கன்னு ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நன்றாக தெரியும். உங்க பருப்பு இனி வேகாது.
Rate this:
2 members
0 members
13 members
Share this comment
Cancel
Karthi - Kerala,இந்தியா
05-டிச-201214:20:44 IST Report Abuse
Karthi ஹா ஆ, இன்னைக்கு இந்த டிராமா போதும், மீதிய நாளைக்கு பார்ப்போம். உறக்கம் வருது,
Rate this:
1 members
0 members
10 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
05-டிச-201213:54:17 IST Report Abuse
Pugazh V தமிழ் நாட்டிற்கு தண்ணீர் தர வேண்டும் என்று சொன்ன காங்கிரசை, எதிர்த்தும், தண்ணீர் தர மறுக்கும் பி ஜே பி யை ஆதரித்தும் கருத்து எழுதும் தமிழ் இன துரோகிகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் நண்பர்களே. நாளை ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமே.
Rate this:
33 members
0 members
8 members
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
05-டிச-201218:49:58 IST Report Abuse
Pannadai Pandianஇன துரோகி என்றால் ஒருத்தன் தான். அது உன் தலைவன் தான்....
Rate this:
3 members
0 members
24 members
Share this comment
Cancel
K.Niranjan - Doha,கத்தார்
05-டிச-201212:38:13 IST Report Abuse
K.Niranjan குஜராத் கடனில் இருப்பதாக காங்கிரஸ் சொல்கிறது... அனால் குஜராத் அரசு பட்ஜெட் போட்டு மீதி பணத்தை பாங்கில் டெபாசிட் செய்துள்ளதாக கூறுகிறது.....
Rate this:
3 members
0 members
13 members
Share this comment
Cancel
Eswar - singapore ,சிங்கப்பூர்
05-டிச-201211:30:03 IST Report Abuse
Eswar ஏன் ஏன் ? ஒரு நல்ல மனுஷன் ஆட்சி செய்துக்கிட்டு இருக்கிறாரு அது புடிக்கலையடா?
Rate this:
3 members
0 members
29 members
Share this comment
Cancel
pmhamdan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
05-டிச-201210:30:00 IST Report Abuse
pmhamdan ஒரு தலை பட்சமாக நடக்கும் எந்த ஆட்சியும் நிரந்தரமாக இருக்க முடியாது, குஜராத்தில் பொய் பாருங்க உண்மை தெரியும் ? மற்று ஆட்சி வந்தால் தான் நல்லது நிச்சயம் வரும்
Rate this:
54 members
0 members
14 members
Share this comment
Cancel
Karthi - Kerala,இந்தியா
05-டிச-201209:14:09 IST Report Abuse
Karthi போன் வயர் பிஞ்சு ஒரு வாரமாச்சு
Rate this:
3 members
0 members
42 members
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
05-டிச-201208:54:50 IST Report Abuse
Pannadai Pandian குஜராத் தேர்தல் அறிக்கையை யார் வெளி இடுகிறார்கள் பாருங்கள் மாநில தலைவர்கள் இல்லையா ???? கட்சி கண்டிப்பா ஊத்திக்கும்.
Rate this:
6 members
0 members
38 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்