Govt officials careless in fire extinguishing materials | தீத்தடுப்பு கருவி பொருத்துதல் அரசு அதிகாரிகள் "கொர்ர்'| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீத்தடுப்பு கருவி பொருத்துதல் அரசு அதிகாரிகள் "கொர்ர்'

Added : டிச 04, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

தமிழகத்தில், பெரும்பாலான அரசு அலுவலகங்களில், முக்கிய ஆவணங்களை பாதுகாப்பதற்காக, தீ தடுப்பு சாதனங்கள் பொருத்தப்படவில்லை. இதுகுறித்து, அரசு அதிகாரிகளின் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஏராளமான மத்திய மற்றும் மாநில அரசு துறை அலுவலகங்கள் உள்ளன. ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும், முக்கிய ஆவணங்கள், பாதுகாக்கப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டிருக்கும். அரசு அலுவலகங்களில், தீ தடுப்பு சாதனங்கள், கட்டாயம் பொருத்தப்பட வேண்டும். ஆரம்ப காலத்தில், அரசு அலுவலகங்களில் தீ தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டன. நாளடைவில், அவற்றை பயன்படுத்துவதில், அரசு துறை அலுவலகங்கள் அலட்சியம் காட்டத் துவங்கின. பல அலுவலகங்களில், தீ தடுப்பு சாதனங்களின் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன், சென்னை எழிலகத்தில், தீ விபத்து ஏற்பட்டது. ஏராளமான ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின. தமிழக முதல்வர் ஜெயலலிதா, அரசு கட்டடங்களில், தீ விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு, "தமிழ் நாட்டிலுள்ள அனைத்து அரசு அலுவலக கட்டிடங்களிலும், தீ விபத்துக்கள் ஏற்படும் போது, உபயோகிப்பதற்கு ஏதுவாக, தீ தடுப்பு சாதனங்களை வைத்திருக்க வேண்டும்' என, உத்தரவிட்டார். தமிழக முதல்வரின் உத்தரவை தொடர்ந்து, சென்னையில் உள்ள அரசு துறை அலுவலகங்களில், தீ தடுப்பு சாதனங்கள் பொருத்தும் பணியில், சம்மந்தப்பட்ட அதிகாரிகள், தனிக் கவனம் செலுத்தினர். சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில், தமிழக முதல்வரின் உத்தரவு, முறையாக பின்பற்றப்படவில்லை. சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், இரண்டு மாதங்களுக்கு முன், கொண்டலாம்பட்டி மண்டலத்தில், பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் மையம் ஒன்றில், தீ விபத்து ஏற்பட்டு, பல்வேறு ஆவணங்கள் எரிந்து நாசமாகின. அரசு துறை அலுவலகங்கள் அனைத்திலும், இந்த அவல நிலையை, சம்மந்தப்பட்ட அரசுத் துறை உயர் அதிகாரிகள், கண்டும், காணாதது போல இருந்து வருகின்றனர்.
தீ தடுப்பு சாதனங்களை பயன்படுத்துவது குறித்து, ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும், ஆண்டுக்கு ஒரு முறை, தீயணைப்பு படை வீரர்கள் மூலம், செய்முறை விளக்கம் காட்டப்படுவது வழக்கம். ஆனால், பெரும்பாலான அரசு அலுவலகங்களில், தீ தடுப்பு கருவிகள் பொருத்தப்படாததால், தீ தடுப்பு சாதனங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது கூட, அரசு ஊழியர்களுக்கு தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை