கடலூர்: கட்டுமானப் பொருட்கள் விலையேற்றம் மற்றும் கூலி உயர்வு காரணமாக, கடலூர் மாவட்டத்தில், அரசு ஒதுக்கீடு செய்த, "தானே' புயல், "கான்கிரீட்' வீடுகளைக் கட்ட, பயனாளிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்திலேயே, அதிக குடிசைகள் உள்ள மாவட்டங்களாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் கண்டறியப்பட்டன. இங்குள்ள குடிசை வீடுகளை, "கான்கிரீட்' வீடுகளாக மாற்ற, 2010 - 11ல் கணக்கெடுப்பு
நடந்தது. கடலூர் மாவட்டத்தில், சாலையோரம், புறம் போக்கில் கட்டப்பட்ட வீடுகள் அல்லாத, வீடு கட்டத் தகுதியான குடிசைகளாக, 1.21 லட்சம் வீடுகள் தேர்வு செய்யப்பட்டன. ஆண்டுதோறும், 26 ஆயிரம் வீடுகள் வீதம், இரு ஆண்டுகளில், 52 ஆயிரம் வீடுகள் "கான்கிரீட்' வீடுகளாக கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.
இதுதவிர, அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றவுடன், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த, பசுமை வீடுகள், இந்திரா குடியிருப்பு வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, கட்டப்பட்டு வருகின்றன. கடந்த, 2011, டிச., 30ம் தேதி வீசிய, "தானே' புயலால், கூரை வீடுகள் சின்னாபின்னமாயின. சட்டசபையில் முதல்வர் ஜெ., "தானே' புயல் பாதித்த கடலூர் மாவட்டத்தில், ஒரு லட்சம் "கான்கிரீட்' வீடுகள் கட்டப்படும்' என, அறிவித்தார்.
கடலூர் மாவட்டத்திற்கு, 90 ஆயிரம் வீடுகளும், விழுப்புரம் மாவட்டத்தில், 10 ஆயிரம் வீடுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஒவ்வொரு வீடும், ஒரு லட்ச ரூபாயில், 200 சதுர அடி பரப்பளவில் கட்ட வேண்டும்.
வீடு கட்டத் தேவையான, ஜல்லி, மணல், செங்கல் விலை, பல மடங்கு உயர்ந்தன; அதுமட்டுமின்றி, கட்டுமான கூலியும் உயர்ந்து உள்ளது. இதனால், ஒரு லட்சம் ரூபாயில், "கான்கிரீட்' வீடு கட்ட முடியுமா என,
சந்தேகம் எழுந்து உள்ளது.
கடலூர் மாவட்டத்தில், 13 ஊராட்சி ஒன்றியங்களில், 683 கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களுக்கும், "கான்கிரீட்' வீடுகள் கட்ட, பயனாளிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், உத்தரவை பெற்ற பயனாளிகள், வீட்டு வேலை துவங்காமல், தயக்கம் காட்டி வருகின்றனர். கடலூர் ஒன்றியத்திற்கு ஒதுக்கப்பட்ட, 13 ஆயிரம் "கான்கிரீட்' வீடுகளில், 71 வீடுகளுக்கு மட்டுமே கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. இதே போல, ஒவ்வொரு ஒன்றியத்திலும் நிலைமை மோசமாக உள்ளது. "தானே' புயலால் வீடிழந்த பொதுமக்கள், அரசு வழங்கியுள்ள சலுகையை பயன்படுத்திக் கொள்ளவும் முடியாமல், ஒதுக்கவும் முடியாமல்,
குழப்பத்தில் உள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.