Nanjil Sampath joins AIADMK; appointed deputy propaganda secy | அ.தி.மு.க.,வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத் : கை மேல் பதவியும் கிடைத்தது | Dinamalar
Advertisement
அ.தி.மு.க.,வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத் : கை மேல் பதவியும் கிடைத்தது
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை :"ம.தி.மு.க.,விலிருந்து நீக்கட்டும் பார்க்கலாம்; நானாக எந்தக் கட்சிக்கும் செல்ல மாட்டேன்; இலக்கியப் பணியே போதும் என நினைக்கிறேன்' என்பது போன்ற வசனங்களை, கடந்த ஒரு மாதமாக பேசி வந்த, ம.தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத், அ.தி.மு.க.,வில் நேற்று இணைந்தார்.இதற்கு, கை மேல் பலனாக, அ.தி.மு.க.,வின் துணை கொள்கை பரப்பு செயலர் பதவியை, ஜெயலலிதா வழங்கியுள்ளார்.

வைகோவுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, சில மாதங்களாக கட்சிப் பணிகளிலிருந்து விலகியிருந்தார், நாஞ்சில் சம்பத். இவரின் போக்கை விமர்சித்து, ம.தி.மு.க., ஏடான சங்கொலியில் செய்திகள் வந்தன. இதற்கு, பதிலடி கொடுத்த சம்பத், வைகோவை கடுமையாக விமர்சித்தார்.

வீராவேசம்:"என் மகள் திருமணத்துக்கு, வைகோவை அழைத்துள்ளேன். ஆனால், திருமணத்துக்கு அவர், தயவு செய்து வர வேண்டாம்' என அறிவித்தார். கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால், வேறு கட்சியில் சேரப் போகிறார் என, தகவல்கள் வெளியாகின.இதை மறுத்த சம்பத், "நான் வளர்த்த குழந்தை, ம.தி.மு.க., அதிலிருந்து நான் எதற்கு விலக வேண்டும்? என்னை, நீக்கட்டும் பார்க்கலாம். எந்த அரசியல் கட்சியிலும் சேர நான் விரும்பவில்லை. தமிழ் எனக்கு வாழ்வு அளிக்கும்' என, வீராவேசம் காட்டி வந்தார்.

து.கொ.ப.செ.,:தி.மு.க.,வில் சம்பத் சேரலாம் என்ற பேச்சும் அடிபட்டது. ஆனால், திடீரென்று யாரும் எதிர்பாராத நிலையில், நேற்று, சென்னை போயஸ் கார்டனில், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, அ.தி.மு.க.,வில் இணைந்தார். அவருக்கு, கட்சிப் பதவியையும் உடனடியாக வழங்கியுள்ளார் ஜெயலலிதா.

இதுகுறித்து, அ.தி.மு.க., தலைமை வெளியிட்டு அறிக்கையில், "ம.தி.மு.க., கொள்கை விளக்க அணி செயலர் நாஞ்சில் சம்பத், போயஸ் கார்டனில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினராக இணைந்து கொண்டார்' என கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், "அ.தி.மு.க.,வின் கொள்கை பரப்பு துணை செயலர் பொறுப்பில், நாஞ்சில் சம்பத், இன்று முதல் நியமிக்கப்படுகிறார்; அவருக்கு, கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிக்கக் கேட்டுக் கொள்கிறேன்' என கூறியுள்ளார்.

சுயமரியாதை:அ.தி.மு.க.,வில் இணைந்தது குறித்து, "ஜெயா டிவி'க்கு மட்டும் சம்பத் அளித்த பேட்டி:ம.தி.மு.க.,வுக்காக, 19 ஆண்டுகள் பணியாற்றினேன். ஆனால், வைகோ என்னை பழிவாங்கி விட்டார். எனது சொந்த ஊரிலேயே என் கொடும்பாவியை எரித்து, என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினர். தன்மானமும், சுயமரியாதையும் கிடைக்கும் என்பதால், அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளேன்.தி.மு.க.,வில் நான் இணையப் போவதாக, தி.மு.க.,வே வதந்தியைக் கிளப்பிவிட்டது. அ.தி.மு.க.,வில் அமைப்பு ரீதியாக உள்ள, 52 மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வேன்.ஜெயலலிதாவின் துணிச்சலும், ஆளுமைத் திறனும் பிற மாநில முதல்வர்களும் பின்பற்றக் கூடியதாக உள்ளது. அவரது தலைமையிலான ஆட்சி, சரியான திசையில் சென்று கொண்டுள்ளது.இவ்வாறு, நாஞ்சில் சம்பத் கூறினார். முதல்வர் ஜெயலலிதாவையும், அவரது அரசையும் மிகக் கடுமையாக விமர்சித்தவர் சம்பத் என்பது குறிப்பிடத் தக்கது.

ஒரு கூட்டத்திற்கு ரூ.25,000 சம்பளம்?நாஞ்சில் சம்பத், அ.தி.மு.க.,வில் இணைந்தது குறித்து, அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்ததாவது:ம.தி.மு.க.,வில் ஒரு கூட்டத்தில் பேசினால், 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுவது வழக்கம்; அ.தி.மு.க.,வில், 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும். அ.தி.மு.க., ஆட்சியை, இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு யாரும் அசைக்க முடியாது; மாசத்துக்கு, குறைந்தபட்சம், மூன்று கூட்டங்களாவது நடைபெறும்; அதில் பேச வாய்ப்பு கிடைக்கும்.மேலும், 40க்கும் மேற்பட்ட வழக்குகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வது, குடும்ப உறுப்பினர்களுக்கு சில சலுகைகள் என, பல உபாயங்களை எதிர்பார்த்தே, நாஞ்சில் சம்பத், அ.தி.மு.க.,வில் இணைந்தார்.இவ்வாறு, அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (129)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
06-டிச-201201:18:38 IST Report Abuse
Sundeli Siththar எத்தனை நாளுக்கு இந்த பதவி என்பது தெரியுமா...
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
Pandian hoora - Thanjai,இந்தியா
06-டிச-201200:58:02 IST Report Abuse
Pandian hoora வைகோவின் முரசு என்றும் விழாது
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
Pandian hoora - Thanjai,இந்தியா
06-டிச-201200:41:30 IST Report Abuse
Pandian hoora நம்பர் 2 வை அதே நிலையில் வைத்து இருப்பது எப்படி என்று கலைஞரிடம் கற்றுக்கொண்டிருக்க வேண்டும்...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
ponnambalam s - CHENNAI,இந்தியா
05-டிச-201216:28:45 IST Report Abuse
ponnambalam s செஞ்சி போனார் l கணேசன் போனார் மு கண்ணப்பன் போனார் தாணு போனார் கம்பம் ராமகிருஷ்ணன் போனார் r சுந்தர்ராஜன் போனார் எல்லோரும் ஏன் போனார்கள். உங்களோடு தோள் கொடுதவர்கல்தனே. திரு வைகோவே கட்சி ஆரம்பித்து 19 வருடங்கள் முடிந்துவிட்டது. இன்னும் ஏன் வீம்பு?. நாஞ்சில்சம்பத் உங்களை என்ன செய்தார்? நீங்கள் ஏன்இன்னும் வாய் திறக்க மறுக்கிறீர்கள். இந்த விசயத்தில் யார் மீது தப்பு? சம்பத் உங்களை சந்திக்க அனுமதி கேட்டும் நீங்கள் ஏன் மறுத்தீர்கள்? தயவு செய்து வீம்பை விடுங்கள்? சம்பத் துரோகம் செய்ததாக நான் கருத முடியவில்லை. தோரிகிகள் என்றல் அது செஞ்சியும் கணேசனுமே மற்றவர்கள் சென்றது உங்கள் வீம்பால் தான். அடுத்த முதல்வர் நீங்கள் என்று கருதும் வேளையில் நீங்களே அதற்க்கு எதிரியாக இருக்கிர்ரீர்கள். ஆனாலும் உங்களை நான் இன்னும் தொடர்டந்துகொன்டுதான் இருக்கிறேன்.
Rate this:
9 members
2 members
47 members
Share this comment
Cancel
Karthi - Kerala,இந்தியா
05-டிச-201215:05:50 IST Report Abuse
Karthi எதோ புளுகி தள்ளுனாலும் மாசம் 75000 வருமானம் வருதில்ல. புதுசா ஒரு வேலையில சேர்ந்திருகார். ADMK PVT LTD ல சேர்ந்ததுக்கு என் வாழ்த்துக்கள். வாசகர்கள் அனைவரும் புது வேலையில சேர்ந்த நம்ம சம்பத்துக்கு வாழ்த்துக்கள் சொல்லிடுங்க.
Rate this:
6 members
2 members
57 members
Share this comment
Cancel
MOHAMED GANI - MADURAI,இந்தியா
05-டிச-201215:02:22 IST Report Abuse
MOHAMED GANI தன்மீதுள்ள வழக்கிற்காகவும், இதர பலன்களுக்க்காகவுமே இந்த இணைப்பு நடந்திருக்கிறது. மீண்டும் அ.தி.மு.க கூட்டணியில் வைகோ சேருவார் என்ற யூகத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. தி.மு.கவை உடைத்து தனிக் கட்சி ஆரம்பித்த வைகோவை பொடாவில் சிறையில் அடைத்தார் ஜெ. ஆனாலும் கருணாநிதி அவரை மன்னித்து தி.மு.க கூட்டணியில் இணைத்து மரியாதை அளித்தார். ஆனால் மீண்டும் அ.தி.மு.க கூட்டணியில் இணைந்த வைகோவை விஜயகாந்த் வந்தவுடன் கூட்டணியிலிருந்து கழட்டிவிட்டதோடு, இன்று ம.தி.மு.கவை உடைக்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள். தன்னை வளர்த்த கட்சிக்கும், தலைமைக்கும் துரோகம் செய்த வைகோ தற்போது அதற்கான பலனை அனுபவிக்கிறார்.
Rate this:
21 members
1 members
40 members
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
05-டிச-201214:56:24 IST Report Abuse
தமிழ்வேல் // "நான் வளர்த்த குழந்தை, ம.தி.மு.க., அதிலிருந்து நான் எதற்கு விலக வேண்டும்? என்னை, நீக்கட்டும் பார்க்கலாம். எந்த அரசியல் கட்சியிலும் சேர நான் விரும்பவில்லை. தமிழ் எனக்கு வாழ்வு அளிக்கும்&39 என, வீராவேசம் காட்டி வந்தார்.// தேதிமுகவை சிதற செய்வது போல் ம.தி.மு.க., விடமிருந்து தூண்டில் போட்டு செல்வியால் இவர் இழுக்கப்பட்டார் என்பதே உண்மை... சுயமரியாதைகாரரான இவர் ஆனால், வைகோ என்னை பழிவாங்கி விட்டார். இவரது கொடும்பாவியை எரித்ததில் இவரை பாதித்து விடும் என்று எப்படி நம்பினார் ? தன்மானமும், சுயமரியாதையும் கிடைக்கும் என்பதால், அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளேன் என்பது உண்மை இல்லை .. அவரிடம் இருந்த தன்மானமும் சுயமரியாதையையும் இனிமேல்தான் இழக்கப் போகின்றார்...
Rate this:
9 members
1 members
39 members
Share this comment
Cancel
Dhanabal - kolkata,இந்தியா
05-டிச-201214:53:52 IST Report Abuse
Dhanabal தளபதியாக இருந்த செங்கோட்டையன் கழட்டி விடப்பட்டபோது புதிய வரவுகள் வியப்பளிகிறது....
Rate this:
4 members
2 members
14 members
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
05-டிச-201214:38:23 IST Report Abuse
Nallavan Nallavan வைகோவும் கூட அதிமுகவுடன் மதிமுகவை இணைத்து விடலாம் இரு கட்சிகளின் பலமும் கூடும். அதிமுகவிற்கு இளைஞர்கள் ஆதரவு பெருமளவில் கிட்டும் திமுகவிற்கு உதறல் ஏற்படுத்த முடியும்
Rate this:
13 members
2 members
26 members
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
05-டிச-201214:33:42 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. இனி ஜெயா.. ஈழத்து தேவதையாக தமிழகமெங்கும்.. தமிழர் உள்ள இடங்களிலெல்லாம் ஜோலிக்கபோகிறார்... ஏற்கனவே.. 19 வருடத்திற்கு முன்பே காவேரி பிரச்சினையை தீர்த்து வைத்து, காவேரி தாய் என்ற சுமையை கஷ்டப்பட்டு சுமக்கும் இந்த தாய், இனி இதையும் மிக கஷ்டப்பட்டு சுமக்க வேண்டியிருக்கும்.. பாவம்.. வேறு வழியில்லை... இனி வேலுபிள்ளை பிரபாகரன்... அதிமுக மேடைகளில் புகழப்படுவார்.. இனி தமிழீழ புரசினைகள் விரைந்து தீர்க்கப்படும்... கருணாவால் முள்வேலிக்குள் அடைக்கப்பட்ட.. தமிழர்கள் ( போதுமா திரு பன்னாடை - திருப்திதானே ) முல்வேளியிளிருந்து வெளியேவந்து.. சுதந்திர காற்றை அனுபவிக்க போகிறார்கள்..எவை அனைத்தும்.. ஏப்ரல் 2013 தீர்க்கப்படும்... அதிகபட்சம்... மே 2014 ( MP தேர்தலுக்குள் ) தீர்க்கப்பட்டுவிடும்.. அதற்க்கு இந்த நாஞ்சில் சம்பத்... ஜெயா சந்திப்பு அத்தாட்சி... நாமும் வாழ்த்துவோம்...
Rate this:
11 members
0 members
56 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்