E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
கோவில் யானைகளுக்கு ஆயுள் குறைவது ஏன்? : ஊட்டச்சத்து உணவு குறைவு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 டிச
2012
23:49

தமிழக கோவில் யானைகள், ஊட்டச்சத்து மற்றும் உணவு பற்றாக்குறையால், ஆரோக்கியம் குன்றி, குறைந்த ஆயுட்காலத்தை கொண்டிருக்கின்றன. கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் தேவஸ்தானத்தில் உள்ள, "யானைத்தாவளத்தில்' 85 யானைகள் முகாம்கள், பராமரிக்கப்படுகின்றன. அங்குள்ள கோவில் யானைகள், வழக்கமாகவே, ஊட்டச்சத்து உணவு பழக்கம் கொண்டவை; அவற்றுக்கு, ஆயுர்வேத மருந்துகளும் வழங்கப்படுகின்றன. யானை பராமரிப்புக்கு, அரசும், தேவஸ்தான போர்டும், கோவில் நிர்வாகங்களும், போதிய நிதி ஒதுக்கி வருகின்றன. யானைகள், பக்தர்களிடம் தும்பிக்கை ஏந்தி, பிச்சை எடுப்பதில்லை.
ஆனால், தமிழக கோவில்களில் உள்ள யானைகளுக்கு, உணவுக்காக, தனி நிதி ஒதுக்கப்படாததால், பிச்சை எடுக்கின்றன!

தமிழகத்தில், கோவில் பிரசாதம், பாயாசம் உள்ளிட்ட உணவுகளை, பக்தர்கள், யானைகளுக்கு வழங்குகின்றனர். அதிகமான இனிப்பு உணவுகளை சாப்பிடும் நிலைக்கு, யானைகள் தள்ளப்படுவதால், உடல் ஆரோக்கியம் குன்றி விடுகிறது. இதனால், தமிழகத்தில், கடந்த சில ஆண்டுகளில், 25க்கும் மேற்பட்ட கோவில் யானைகள்
இறந்துள்ளன.

யானை வளர்ப்பில் அனுபவம் பெற்ற, கால்நடை மருத்துவர் ஒருவர் கூறியதாவது: ஒரு யானை, ஆரோக்கியமாக இருக்க, தினமும், 150 முதல், 200 கிலோ, பச்சைப் புல் தேவை. இது தவிர, 2 கிலோ கொள்ளு, 5 கிலோ அரிசி சாதம், 5 தேங்காய், 150 கிராம் உப்பு, 100 கிராம் தாது உப்பு, 150 கிராம் வெல்லம் உணவாக சாப்பிட வேண்டும். 150 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். வாழைப்பழம், மூங்கில் குருத்து, கரும்பு, காட்டுப்புல் போன்றவற்றையும் யானைகள் விரும்பி சாப்பிடும். இதற்கு, நாள் ஒன்றுக்கு, 800 முதல், 1,000 ரூபாய் வரை செலவாகும். தினமும், 1,000 ரூபாய் செலவிடுவது கடினம். உணவு செரிமான கோளாறு காரணமாக தான், யானைகள் அதிகம் இறக்கின்றன. இதனால், யானைகளுக்கு, மாதத்தில் ஒரு முறை, குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். கோவில் யானைகள், ஒரே இடத்தில் கட்டி வைக்கப்படுவதால், உடலில் சோர்வு ஏற்படுவதுடன், உடற்பயிற்சியும் கிடைப்பதில்லை. புல் தின்னும் இயற்கை முறையை கூட, யானைகள் மறந்துவிடும் நிலை உள்ளது. இதனால், புல்வெளி, பசுமை செடிகள் மற்றும் சாதாரண மண்ணில் நடக்க விட வேண்டும்.
கேரள கோவில்களில் ஆண் யானைகள் தான் அதிகம்; கோவில் விழாக்களிலும், நீண்ட தந்தம் கொண்ட, கம்பீரமான ஆண் யானைகளை தான் பயன்படுத்தப்படுகின்றன. ஆண் யானைகள், 10 வயதிலும், பெண் யானைகள், 13 வயதுக்குள்ளும் பருவ வயதை அடைந்து விடுகின்றன. தமிழக கோவில்களில் வளர்க்கப்படும் பெரும்பாலான யானைகள், பெண் இனத்தைச் சார்ந்தவை; ஊட்டச்சத்து குறைவு காரணமாக, பருவம் அடைவதில்லை; எலும்பும் தோலுமாகவே இருக்கின்றன. கோவில்களில் உள்ள யானைகள், குட்டி ஈன்றதாக வரலாறு இல்லை. இனசேர்க்கை உள்ளிட்ட, இயற்கை தேவைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதாலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததாலும், நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றன. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

- நமது நிருபர் -




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankaranarayanan Subbukutti - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-டிச-201223:58:24 IST Report Abuse
Sankaranarayanan Subbukutti Elephant is not our Tamil Nadu National animal ( we don't have any Embalm with Elephant ). because of the reason given before Elephants are not maintained properly with its sufficient nutrition. Only God for few.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.