E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் இல்லை : சென்னையில் டிஜிட்டல் மயமாவது கேள்விக்குறி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 டிச
2012
23:50

தமிழக அரசின் கேபிள் நிறுவனத்துக்கு, டிஜிட்டல் உரிமம் வழங்க, மத்திய அரசு மறுத்து விட்டதால், சென்னை மாநகரில், கேபிள் இணைப்புகளை, டிஜிட்டல் மயமாக்குவது தடைபட்டுள்ளது. நாட்டில் உள்ள மாநகரங்களில், கேபிள் இணைப்புகளை, டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவித்தது. இதற்காக, இரண்டு முறை கால அவகாசம் அளித்து, செப்டம்பர் 30ம் தேதியை, இறுதி நாளாக அறிவித்தது. மத்திய அரசு விதித்த கெடுவுக்குள், சென்னை மாநகரில், கேபிள் இணைப்புகள் டிஜிட்டல் மயம் செய்யப்படவில்லை.

தமிழக அரசு துவங்கியுள்ள, அரசு கேபிள் நிறுவனம் தான், இதற்கு காரணம் என, குற்றம் சாட்டப்படுகிறது. அரசு கேபிள் நிறுவனம், டிஜிட்டல் மயமாக்கத்திற்கான உரிமம் கேட்டு, மத்திய அரசுக்கு விண்ணப்பித்துள்ளது.
தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், அரசுக்கு உரிமம் வழங்க, விதிகளில் இடமில்லை எனக் கூறி, மறுத்து விட்டது. ஒழுங்குமுறை ஆணைய விதிகளின்படி, கேபிள் இணைப்புகளை கண்காணித்து, சீரான ஒலி, ஒளிபரப்பு மற்றும் கட்டணங்கள் சீரமைப்பு ஆகியவற்றை மட்டும் தான், அரசு நிறுவனம் மேற்கொள்ள முடியும். அரசு நிறுவனமே கேபிள் தொழிலை செய்ய முடியாது எனவும் கூறியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளாமல், உரிமம் வழங்க வேண்டும் என, தமிழக அரசு அடம் பிடித்து வருகிறது. இதனால், சென்னையில், கேபிள்களை டிஜிட்டல் மயமாக்குவதில், பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தனியார் வசமிருந்த பெரும்பாலான ஆப்பரேடர்கள், அரசு கேபிள் நிறுவனத்தில் இணைந்து விட்டதால், அரசு கேபிள் நிறுவனம் கொடுத்தால் மட்டுமே, டிஜிட்டல் மயமாக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, சென்னை மாநகருக்கு மட்டும், ஏழு தனியார் நிறுவனங்கள், டிஜிட்டல் உரிமத்தை பெற்றுள்ளனர். அரசு கேபிள் நிறுவனத்துக்கு நிரந்த தடையை, மத்திய அரசு அறிவிக்கும் வரை, டிஜிட்டல் உரிமம் பெற்ற தனியார்கள்
காத்திருக்கின்றனர். இதேநிலை தான், சென்னையை தவிர, மாநிலத்தின் பிற பகுதிகளிலும் நிலவுகிறது. அரசு கேபிள் நிறுவனத்திடம், இணைப்புகளை ஒப்படைத்த ஆப்பரேட்டர்கள், அரசு கேபிள் நிறுவனத்தின் தவறான அணுகுமுறையால், கொதித்து போயுள்ளனர்.

கேபிள் ஆப்ரேட்டர்களை காப்பாற்றுவது, கட்டண சேனல்களின் ஆதிக்கத்தை குறைப்பது, தனியார் ஆதிக்கத்தை கேபிள் தொழிலில் தடுப்பது போன்ற காரணங்களுக்காக, துவங்கப்பட்ட அரசு கேபிள் நிறுவனம், அடிப்படைக் கொள்கைகளிலிருந்தே மாறுபட்டு செயல்படுவதாக, தமிழ்நாடு கேபிள் ஆப்பரேட்டர்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டுகிறது. அரசு கேபிள் நிறுவனத்தின் அடாவடிகளால், தஞ்சாவூர், குன்னூர் பகுதிகளில், இரு தனியார் நிறுவனங்கள், டிஜிட்டல் உரிமத்தை பெற்றுள்ளன. மாநகரங்களுக்கு அடுத்து, நாட்டின் பிற பகுதிகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை, அடுத்த ஒரு ஆண்டுக்குள், மத்திய அரசு அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
அப்போது, டிஜிட்டல் உரிமம் பெற்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து கொள்ள, கேபிள் ஆப்பரேட்டர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு கேபிள் ஆப்பரேட்டர்கள் சங்க, தென்மாவட்ட செயலர் ஆறுமுகம் கூறியதாவது:
அரசு கேபிள் நிறுவனம், துவங்கப்பட்டதன் நோக்கத்தை மறந்து செயல்படுகிறது. கேபிள் தொழிலை கண்காணித்து, சீரமைப்பதற்கு பதில், அரசே ஒரு போட்டியாளராக களம் இறங்கி, கேபிள் தொழிலில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. கேபிள்களை கண்காணிக்கும் பணியை மட்டும் அரசு கேபிள் நிறுவனம் செய்தால், மக்களுக்கு தேவையான கேபிள் சேவையை அளிக்க முடியும். அதை விட்டுவிட்டு, விதிகளுக்கு புறம்பாக, டிஜிட்டல் உரிமம் வாங்க, அரசு முனைவது, பொதுமக்களுக்கான சேவையை தடுக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. இவ்வாறு ஆறுமுகம் கூறினார்.

டிஜிட்டல் உரிமம் கேட்டு, மத்திய அரசுக்கு விண்ணப்பித்து பல மாதங்களாகிறது. இதுவரை, உரிமம் வழங்கப்படவில்லை என, அரசு கேபிள் நிறுவன நிர்வாக இயக்குனர் விவேகானந்தன் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: உரிமம் வேண்டி விண்ணப்பித்து நீண்ட காலமாகியும், மத்திய அரசு இதுவரை எந்த பதிலையும் சொல்லவில்லை. மேலும், செட்-ஆப் பாக்ஸ்கள் வெளிநாடுகளிலிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், சென்னை மாநகரில் டிஜிட்டல் மயமாக்குவதற்கு, 2013 மார்ச் மாதம் வரை கால அவகாசம் அளிக்குமாறு, மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். இவ்வாறு விவேகானந்தன் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.