அரியலூர்: அரியலூர் மாவட்டம், தா.பழூர் பஞ்., யூனியனுக்குட்பட்ட காரைக்குறிச்சி கிராமத்தில், கடந்த, 2010ம் ஆண்டு மத்திய நில நீர் வாரியம் சார்பில், பூமியின் தண்ணீர் அளவு மற்றும் படிவங்கள் ஆய்வு ஆராய்ச்சிக்காக, 1,300 அடி ஆழத்தில் நான்கு போர்வெல்கள் போடப்பட்டது.
மேற்கண்ட போர்வெல்களில், ஒன்றிலிருந்து ஒரு நிமிடத்துக்கு, 200 லிட்டர் தண்ணீரும், மற்ற மூன்று போர்வெல்களிலிருந்து தலா, 100 லிட்டர் தண்ணீர் வீதமும் வெளிவந்து கொண்டிருக்கிறது. மேற்கண்ட போர்வெல்களிலிருந்து மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்தால், ஒரு மணி நேரத்துக்கு 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் இறைக்கலாம்.
ஆனால் மழை காலத்தில் மேற்கண்ட போர்வெல்களிலிருந்து, பாஸ்பேட் மற்றும் அம்மோனியா கலந்து வருவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. மேற்கண்ட போர்வெல்களை நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்ட, அரியலூர் கலெக்டர் செந்தில்குமார், அவற்றை சுத்தம் செய்து, சுத்திகரிப்பு மூலம் குடிநீராக பயன்படுத்த முடியுமா? அல்லது விவசாயத்துக்கு ஏற்ற வகையில் மேற்கண்ட தண்ணீரை பயன்படுத்த முடியுமா? என, ஆய்வு மேற்கொள்ளுமாறு, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியளர் பாலகிருஷ்ணன், தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.