FDI in retail is death knell for small industries: Sushma Swaraj | சில்லரை வர்த்தகத்தில் வேண்டாம்; வேறு எந்த துறையானாலும் "ஓகே!': சுஷ்மா பேச்சு| Dinamalar

சில்லரை வர்த்தகத்தில் வேண்டாம்; வேறு எந்த துறையானாலும் "ஓகே!': சுஷ்மா பேச்சு

Added : டிச 04, 2012 | கருத்துகள் (29)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
FDI in retail is death knell for small industries: Sushma Swaraj

""கட்டமைப்பு, மருந்துகள் தயாரிப்பு உட்பட, வேறு எந்த துறைகளில் வேண்டுமானாலும், அன்னிய முதலீட்டை அனுமதியுங்கள். நாங்கள் அனைத்தையும், முழு மனதோடு வரவேற்கிறோம்; ஒத்துழைப்பு தருகிறோம். ஆனால், சில்லரை வர்த்தகத்தில் மட்டும், அன்னிய முதலீடு என்பது, வேண்டவே வேண்டாம்; இம்முடிவை கைவிடுங்கள்,'' என, லோக்சபாவில், எதிர்க்கட்சித் தலைவர், சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தினார்.


வாக்குறுதி என்னாச்சு?

சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்தது தொடர்பான விவாதம், லோக்சபாவில் நேற்று துவங்கியது. விவாதத்தை துவக்கி வைத்து, பா.ஜ., வைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், அ.தி.மு.க., முலாயம் சிங்கின் சமாஜ்வாதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் என, அனைத்து கட்சிகளுமே, "சில்லரை வர்த்கத்தில் அன்னிய முதலீட்டை, அனுமதிக்க வேண்டாம்' என்றே கோருகின்றன.இந்த பிரச்னை தொடர்பாக, 2011 டிசம்பர், 2ம் தேதியன்று, அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மறுநாள், இதே சபையில், அப்போது, நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, ஒரு வாக்குறுதி அளித்தார்.அப்போது, "சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீடு தொடர்பாக, அனைத்து தரப்பினருடனும் பேசி, கருத்தொற்றுமை ஏற்படுத்தப்படும். அதன்பின், இந்தத் துறையில், அன்னிய முதலீட்டை அரசு அனுமதிக்கும்' என்றார்.அந்த உறுதிமொழியை, தற்போது அரசு மீறுகிறது. இவ்விஷயத்தில் கருத்தொற்றுமை என்பதே இல்லாத போது, முடிவை அமல்படுத்த மத்திய அரசு துணிவது, மிகவும் தவறு. எல்லா மாநில முதல்வர்களிடமும், ஆலோசனை நடத்தப்படும் என, வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா கூட கூறினார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டால், முதலில் விலை குறைக்கப்படும். இதன் மூலம், சிறு வணிகர்களை எல்லாம் ஒழித்துக் கட்டப்படுவர். அதன்பின், ஒரு சிலர் மட்டுமே, ஏகபோக உரிமை கொண்டாடுவர். இறங்கிய விலைகள் எல்லாம், அப்போது பல மடங்கு உயரும். சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீடு என்பதன் வரலாறு, இப்படித்தான் இருந்து வந்துள்ளது.


"ஏமாற்றியது பெப்சி!'


குஜராத்தில் உள்ள அமுல் நிறுவனம், பால்வளத் துறையில் மிகப்பெரிய புரட்சி செய்தது; அந்நிறுவனம் கூட, இம்முடிவை எதிர்க்கிறது. முதன் முதலாக பஞ்சாப் மாநிலத்தில், "பெப்சி' நிறுவனம் நுழைந்த போது, "உள்ளூர் உருளை மற்றும் தக்காளியை கொள்முதல் செய்வோம்' என்றே கூறியது. ஆனால், அப்படி செய்யவில்லை. தாங்கள் எதிர்பார்க்கும் தரத்திற்கு, உருளை மற்றும் தக்காளி, இந்தியாவில் கிடைக்கவில்லை என, காரணம் கூறி, வெளிநாடுகளில் இருந்து, இறக்குமதி செய்தது. இதனால், பஞ்சாப் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.இதேபோல், சர்க்கரை உற்பத்தியிலும், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. சில்லரை அன்னிய முதலீட்டை அனுமதித்தால், ஏறத்தாழ, 40 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என, அரசு கூறுகிறது. சர்வதேச அளவிலேயே, மொத்தம், 21 லட்சம் வேலை வாய்ப்புகள் மட்டுமே, இந்த துறையில் உள்ளன.நிலைமை இப்படியிருக்க, இந்தியாவில் மட்டும் இவ்வளவு எண்ணிக்கையில், எப்படி வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பது தெரியவில்லை."வெளிநாட்டு நிறுவனங்கள் எல்லாம், உள்ளூரில், 30 சதவீதம் வரை கொள்முதல் செய்யும். அதனால், விவசாயிகள், உற்பத்தியாளர்கள் கவலைப்பட வேண்டாம்' என, மத்திய அரசு கூறுகிறது.உலக வர்த்தக அமைப்பான, டபிள்யூ.டி.ஓ., ஒப்பந்தத்தில், இந்தியா கையெழுத்திட்டுள்ளது. எனவே, வெளிநாட்டு நிறுவனங்களை, இங்கேயே கொள்முதல் செய்ய வேண்டும் என, கட்டாயப்படுத்த முடியாது.


"காங்கிரசே எதிர்த்ததே?'


சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை, காங்கிரஸ் எதிர்த்தே வந்துள்ளது. காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்த போது, இந்த விவகாரம் தொடர்பாக, அந்தக் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர், பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி, இதே சபையில், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். ராஜ்யசபாவில், அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மன்மோகன்சிங்கும், "சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டை அனுமதிக்க கூடாது' என்றார். அப்போது, இந்தத் துறையின், அன்னிய முதலீட்டிற்கு எதிர்த்துத் தெரிவித்த காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம், இப்போது, 360 டிகிரிக்கு அப்படியே மாறி பேசுவது, ஆச்சர்யமாக உள்ளது."வால்மார்ட்' போன்ற நிறுவனங்களிலும், ஊழல் மலிந்துள்ளது. இந்நிறுவனத்தின், இந்திய தலைமை அதிகாரி, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். இந்திய அதிகாரிகள் நிறைய பேருக்கு, வால்மார்ட் சார்பில், லஞ்சம் கொடுக்கப்பட்டதே இதற்கு காரணம். எனவே, சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீட்டு முடிவை கைவிட வேண்டும்.கட்டமைப்பு மற்றும் மருந்துகள் தயாரிப்பு உட்பட, வேறு எந்த துறைகளில் வேண்டுமானாலும், அன்னிய முதலீடு செய்து கொள்ளுங்கள்; நாங்கள் அனைத்தையும் முழு மனதாக வரவேற்கிறோம்; ஒத்துழைப்பு தருகிறோம்.வேண்டுமானால், சர்வதேச மாநாடு களுக்கும், பிரதமருடன் சென்று, இதர துறைகளின் அன்னிய முதலீட்டிற்கு ஆதரவாகப் பேசத் தயார். ஆனால், சில்லரை வர்த்தகத்தில் மட்டும், அன்னிய முதலீடு என்பது வேண்டவே வேண்டாம்; இம்முடிவை அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு சுஷ்மா சுவராஜ் பேசினார்.

சுஷ்மாவை தொடர்ந்து பேசிய, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய்
, ""காங்கிரசும் சரி, பா.ஜ.,வும் சரி. இரண்டுமே எதிர்க்கட்சியாக இருக்கும் போது, ஒரே மாதிரியாகப் பேசுகின்றன. ஆளும் கட்சியானவுடன் வேறு மாதிரி பேசுகின்றன; அதுதான் இந்த விஷயத்திலும் நடக்கிறது,'' என்றார்.


பா.ஜ., கோரிக்கை நிராகரிப்பு:

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்ப்பது தொடர்பான தீர்மானங்களை பா.ஜ.,வும், திரிணமுல் காங்கிரசும் கொண்டுவர, சபாநாயகர் மீராகுமார், அதற்கு அனுமதி வழங்கினார். அதற்கு முன், "அன்னிய செலாவணி தொடர்பான சட்டத் திருத்தம் குறித்து, தனியாக விவாதம் நடத்த வேண்டும்' என, பா.ஜ., மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கோரினார்.அவரின் கோரிக்கைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, பாசுதேவ் ஆச்சார்யாவும், இந்திய கம்யூனிஸ்ட்டை சேர்ந்த, குரு தாஸ் தாஸ் குப்தாவும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர், கமல்நாத்தும், உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டேயும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.இரு தரப்பினரின் கருத்துக்களையும் பரிசீலித்த சபாநாயகர் மீரா, "சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீடு மற்றும் அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் தொடர்பான விவாதங்கள் ஒன்றாகவே நடைபெறும்; விவாதத்திற்குப் பின் ஓட்டெடுப்பு நடக்கும்' என, திட்டவட்டமாக கூறினார்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mu.gopal - karur,இந்தியா
05-டிச-201219:50:57 IST Report Abuse
mu.gopal இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போக வழி வகை செய்துள்ள காங்கிரசே தேர்தல் வரட்டும் நாங்கள் (பொது மக்கள் ) யார் என்று காட்டுகிறோம்.
Rate this:
Share this comment
Cancel
Thangamani Palanisamy - salalah,ஓமன்
05-டிச-201213:41:13 IST Report Abuse
Thangamani Palanisamy எந்த துறையிலும் அந்நிய முதலீடு தேவை இல்லை. அரசியல் வியாதிகளின் சொத்துக்களை பிடுங்கினாலே போதும். நம் நாட்டில் இல்லாத செல்வங்கள் வேறெங்கும் இல்லை. இவர்களின் திருட்டுப் பணத்தை தங்களின் நேர்பார்வையில் வைக்கவே அந்நிய முதலீடு என்று ஒரு நாடகம் போடுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Siva Raj - villupuram,இந்தியா
05-டிச-201213:35:16 IST Report Abuse
Siva Raj குரங்கு கையில் சிக்கிய பூ எனது இந்தியாவும் இந்திய மக்களும்
Rate this:
Share this comment
Cancel
Abdul Jabbar - dammam,சவுதி அரேபியா
05-டிச-201210:05:26 IST Report Abuse
Abdul Jabbar சரியாக சொன்னீர்கள் திருமதி.சுஷ்மா அவர்களே
Rate this:
Share this comment
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
05-டிச-201215:14:52 IST Report Abuse
முருகவேல் சண்முகம்..///Abdul Jabbar சரியாக சொன்னீர்கள் திருமதி.சுஷ்மா அவர்களே /// ஆம் எதிர்க்கட்சி தலைவியாக சரியாகத்தான் சொன்னார்.. அதே ஆளும் கட்சியாக இருந்தால்.. அது வேறு வாயாக இருக்கும்... அதாவது.. ஆதரிப்பதற்கான காரணங்களை .. ஆதாரங்களோடு.. அழுந்தந்திருத்தமாக சொல்லி இருப்பார்......
Rate this:
Share this comment
Cancel
Ubaidullah Razzaq - al khobar,சவுதி அரேபியா
05-டிச-201209:29:29 IST Report Abuse
Ubaidullah Razzaq சில்லறை வணிஹத்தில் அந்நிய முதலீடு நம் நாட்டுக்கு தேவை இல்லாத ஒன்று இந்த அரசாங்கம் எதற்காக பிடிவாதம் பிடிக்கிறது.விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும்
Rate this:
Share this comment
Cancel
Hari - Chennai,இந்தியா
05-டிச-201208:59:48 IST Report Abuse
Hari எதிர்கட்சிதலைவி அவர்களின் ஆழ்ந்த கருத்துகள் பாராட்டத்தக்கவை ஆ நால் செவிடன் காதில் உதிய சங்கு சத்தம் போல் அல்லவா இருக்கும் பாவம் விவசாஇகள் சிறீய வியாபாரிகள்
Rate this:
Share this comment
Cancel
ராம.ராசு - கரூர்,இந்தியா
05-டிச-201208:45:31 IST Report Abuse
ராம.ராசு அதாவது எதிர்க்கட்சியாகிய நாங்கள் சொல்வதைக் கேட்டேயாகவேண்டும், இல்லாவிட்டால் பாராளுமன்றத்தை நடத்த விடமாட்டோம் என்பாதக் உள்ளது இவரின் பேச்சு. மற்ற எந்த துறைஎன்றாலும் சரி, ஆனால் இதில் மட்டும் வேண்டாம் என்பது அப்படித்தான் உள்ளது. இதே ஆளும் கட்சியாக இருந்து இருக்குமேயானால் கண்டடிப்பாக இந்த நிலையை ஆதரித்தே இருக்கும். நல்ல உதாரணமாக சேது சமுத்திர திட்டத்தைச் சொல்லலாம். ப.ஜ.க கட்சி ஆட்சியின்போது சேது திட்டம் அமைக்க வழி வகை செய்யப்பட்டது. தற்போதைய தமிழ் நாடு ஆளும் கட்சி உட்பட "ஆடம்ஸ் பிரிட்ஜ்" என்பதாக சேது திட்டம் நாட்டிற்கு மிகவும் தேவையான திட்டம் என்பதாக சொன்னது. ஆனால் எதிர்க்கட்சி என்ற நிலையில் அது "ராமர்" பாலமாக சொல்லப்பட்டு, மக்களின் வரிப் பணத்தில் கோடிகளை கடலில் கொட்டிய பிறகு, அந்த திட்டமே கிடப்பில் போடப்படும் சூழலுக்குத் தள்ளப்பட்டு விட்டது. நாட்டு நலனை விட கட்சியை மக்களிடம் காட்டுவதற்கான நடவடிக்கைகளையே எதிர்கட்சிகள் செய்வது... என்ன சொல்ல..?
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
05-டிச-201208:18:04 IST Report Abuse
rajan இந்த அரசிடம் அரசியல் பண்ண அதாவது வரவு செலவு திட்டம் போட்டு நாட்டின் வளத்தை பெருக்க பணம் இல்லை. ஏன். சுரண்டலின் மூலம் தனி மனித ஆதிக்கம் துவங்கி கூட்டு ஆதிக்கம் வரை போய் மக்கள் பணம் அரசின் கைய விட்டு போய் கருப்பு பணமாகி வெளி நட்டு வங்கில முடங்கி அந்த நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுத்து விட்டது. பட்ஜெட் போட்டு பத்தகுறைய மக்களுக்கு காட்டியது தான் நம் பொருளாதார வல்லுனர்களின் சாதனை. நம் வரி பணம் கூடவே மனித உழைப்பு மக்களின் சேமிப்பு எல்லாமே அரசின் வரவு செலவு கணக்குக்கு உட்பட்டது தான். கடசில நாம் கண்டது Poverty amidst Plenty எனும் பொருளாதார தத்துவம் தான். இதற்க்கு எந்த நிதி அமைச்சராவது தார்மீக பொறுப்பு ஏற்ப்பார்களா? எங்கே நம் ஜனநாயகம் இறையாண்மை பார்லிமென்ட் என கூக்குரலிடும் அரசியல்வாதிகள். இவர்கள் நாட்டை ஆண்டார்களா மக்கள் பணத்தை சுரண்டினார்கள? எத்தனை பெரிய ஆதங்கத்தை மக்களுக்கு கொடுதுள்ளர்களா. ஆகா இந்த அரசின் போக்கு நம எட்டு பட்டி மக்களுக்கும் கோவணத்த கட்டி திருவோடு கொடுத்து பிச்சை எடுக்க வைதுடுவானுக. இது நம்ம பொருளாதார நிபுணர் பேசா மடந்தை பிரதமருக்கு தெரியும். பிரதமர் செஞ்ச்ஜோத்து கடன் தீர்க்கும் கர்ண பரம்பரை ஆகிவிட்டார். உலக பொருளாதார மந்த நிலைய இந்த சில்லறை வணிக அந்நிய முதலிடு முலம் நம் நாடு நம் அரசியல் வாதிகளின் சுரண்டலையும் தாண்டி அந்நிய நாடு சக்திகளின் சுரண்டலுக்கு வழிவகுத்துவிடும் மக்களாகிய நாம் ஈடு கொடுக்க வேண்டும் என்பது தெளிவு.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
05-டிச-201207:39:09 IST Report Abuse
ஆரூர் ரங இடைத் தரகர்கள் என வணிகர்களைக் கொச்சைப் படுத்துவது தவறு.சுஷ்மா கூறியபடி எந்த இடைத் தரகர்களும் இல்லாத நிலையிலேயே கரும்பாலைகள் நமது ஏழை விவசாயிகளுக்கு நியாய விலை அளிப்பதில்லை என்பது உண்மையே. போராடினால் கட்டிங் ஆர்டர் கொடுக்கத் தாமதித்து அழிக்கின்றனர். அப்படியிருக்கும்போது நம்மை காலனி அடிமையாய் எண்ணி நடத்தும் அந்நியன் இங்கு கடை விரித்து நம் விவசாயிகளுக்கு, சிறு தொழிலதிபர்களுக்கு நியாய விலையா கொடுக்கப் போகிறான்? அப்படிக் கொடுக்காவிட்டால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க நமது அரசுக்குத் திராணியுண்டா ? (போபாலில் விஷவாயு விபத்துக் கம்பெனி குற்றவாளித் தலைவரை தனிவிமானம் கொடுத்து தப்பவைத்தது காங்கிரஸ் அரசு.இதுபோல தவறு செய்யும் அந்நிய சில்லறை வணிக முதலாளிகளுக்கும் தப்பிக்க சிறப்பு ஏற்பாடுகள்தானே செய்து தருவர்? ). இவர்கள் இருவரும் நமது நாட்டின் வணிகத்தை எப்படி வளர்ப்பார்கள்? இவர்களை நம்பினால் மீண்டும் நாம் அடிமைகளாவோம்
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
05-டிச-201206:52:04 IST Report Abuse
ஆரூர் ரங இந்த வாக்கெடுப்பில் தோற்பதால் காங் அரசு கவிழப் போவதில்லை ஜனாதிபதியும் டிஸ்மிஸ் செய்யமாட்டார். அப்படியிருந்தும் திமுக மனசாட்சியை ஒளித்துவைத்துவிட்டு தான் ஆதரிக்காத தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கக் காரணமென்ன? ஸ்பெக்ட்ரம் கேஸ்தான். வாரிசு மீண்டும் திஹார் வாசன் போவதைத்தடுக்கத்தா என்பது நிச்சயமாகத் தெரிந்துவிட்டது இப்போது மட்டுமல்லா வாழ்நாள் முழுவதும் காங்கிரசின் மானம் கெட்ட நிரந்தர அடிமை திமுக.
Rate this:
Share this comment
MJA Mayuram - chennai,இந்தியா
05-டிச-201209:16:00 IST Report Abuse
MJA Mayuramகற்பனை பூதம் 2G இன்னும் எத்தனை நாளுக்குத்தான் எடுபடும் மக்கள் தெளிவாகிவிட்டார்கள். இன்னுமா அதையே பிடித்துகொண்டு அலைவது மக்கள் சிரிக்க மாட்டார்களா? .ரூம் போட்டு யோசிச்சி அடுத்த பொய் மற்றும் கற்பனை பூத்தத்தை தயார் செய்யுங்கள் இல்லைஎன்றால் மக்கள் தேர்தலில் உங்களுக்கு பூதம் காட்டிவிடுவார்கள் ...
Rate this:
Share this comment
ratthakatteri_modi - மோடி இல்லா தேசம் ,இந்தியா
05-டிச-201211:40:48 IST Report Abuse
ratthakatteri_modiஇவர்களிடமும் இவர்கள் சார்ந்த பாசிச கூட்டதிடமுமா கற்பனைகளுக்கு பஞ்சம், அதுவும் ஒட்டுமொத்த இந்திய நம்பும்படி சொல்வார்கள், ஒரு பொய்யை சொல் அதையே திரும்பத்திரும சொல்லிக்கொண்டே இரு மெய்யாகிவிடும் என்பது இவர்களின் லட்சியம், பதினோரு பேர்கொண்ட குளுபோல இவர்களும் பல்லாயிரம்பேர் கொண்ட குழு உள்ளது. அங்கே சதா மோடி புராணம் பாடப்படும்...
Rate this:
Share this comment
Vignesh - Coimbatore,இந்தியா
05-டிச-201213:05:29 IST Report Abuse
Vigneshடேய் மயூரம், தேர்தல் நடக்க இன்னும் ரொம்ப நாள் இல்லை... 2G ஒரு கற்பனை பூதமா உனக்கு? தேர்தல் முடிவுகள் உனக்கும் உங்க மஞ்ச துண்டுக்கும் நல்ல முடிவைச் சொல்லும்... தமிழின துரோகி உன் மஞ்ச துண்டு காரன்.....
Rate this:
Share this comment
govind - Muscat,இந்தியா
05-டிச-201213:40:45 IST Report Abuse
govind2G என்பது கற்பனை பூதம் அல்ல மகனே... இதை திமுக மற்றும் ஊழல் பெருச்சாளிகள் நினைப்பு... முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலாதே.. கருணாநிதியின் ராஜ தந்திரம் அது.... இப்போதைய மத்திய அரசின் தவிப்பை தன் பக்கம் திருப்பி அலைக்கற்றை முறை கேட்டில் இருந்து தப்பிக்க நினிக்கிறது திகவின் குடும்பம்.. ஆனால் இதை ஆராய்ந்து முடிவு சொன்ன நீதிபதிகள் என்ன முட்டாள்கலா... அல்லது எதிர் கட்சியினரா? கொஞ்சம் நெஞ்சுக்குள்ளேயும் நீதி வேண்டும்.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை