பாரம்பரிய நெல்ரகங்கள் இயற்கை சீற்றத்தை: தாண்டி வளரும்: ஒருங்கிணைப்பாளர் தகவல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

திருத்துறைப்பூண்டி: ""பாரம்பரிய நெல்ரகங்கள் இயற்கை சீற்றங்களை தாண்டி வளரக்கூடியது,'' என்று நமது நெல்லை காப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேசினார்.
திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் கிரியேட் இயற்கை விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், பாரம்பரிய நெல் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதில், பாரத ஸ்டேட் வங்கி முன்னாள் மேலாளர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். "நமது நெல்லை காப்போம்' மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் பேசியதாவது:
நமது முன்னோர்கள் அறிவின் மூலம், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை அடையாளம் கண்டுள்ளனர்.
இதன் மருத்துவ குணங்களையும், கால பருவ நிலைகளையும் அறிந்து, ஒருவருக்கொருவர் பயிர் விதை பரிமாற்றம் செய்து, விவசாய துறையில் மேன்மை பெற்றிருந்தனர்.
நெல், நமது உணவு பொருள் மட்டுமல்ல. நமது கலாச்சாரம், பண்பாட்டை பிரதிபலிப்பதாக இருந்துள்ளது. மங்கலம் மற்றும் அமங்கல காலங்களில் நெல் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. பாரம்பரிய நெல் ரகங்கள் இயற்கை சீற்றங்களை தாண்டி வளரக்கூடியது. இதை பயிரிட்டு, ஏக்கருக்கு, 4,200 கிலோ நெல் அதிக மகசூலாக டெல்டா மாவட்டத்தில் விவசாயிகள் பெற்றுள்ளனர்.
இது கரிகாலன் கட்டிய கல்லணை கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாரம்பரியமிக்க, வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய நெல் ரகங்களை, தமிழகத்தில் விவசாயிகள் சிறிய அளவிலேயே பயன்படுத்தி வருகின்றனர்.
இதை விவசாயிகளிடமிருந்து பெற்று, ஆராய்ச்சி மேற்கொண்டு, 13 ஆயிரத்து, 762 விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருவாரூர் மாவட்ட நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் ரவிசங்கர் பேசுகையில், ""இயற்கை வேளாண்மைக்கும், பாரம்பரிய நெல்லை பாதுகாத்து விவசாயிகளிடம் பரப்ப, நபார்டு வங்கி நிதியுதவியை அளித்து வருகிறது. கிராமம்தோறும் நபார்டு உழவர் மன்றம் அமைத்து, விவசாயிகளுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற கருத்தரங்கில் பங்கேற்ற விவசாயிகள், தங்கள் பகுதி விவசாயிகளுக்கு பயனுள்ள விவசாய தொழில்நுட்பங்களை கொண்டு சேர்க்க வேண்டும்,'' என்று பேசினார்.
கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற மேலாளர் சதாசிவம், ஓய்வு பெற்ற வேளாண்மை இணை இயக்குனர் பழனி, விவசாயிகள் கரிகாலன், யோகநாதன், தமிழக இயற்கை உழவர் இயக்க மாவட்ட செயலாளர் கரிகாலன், தஞ்சை மாவட்ட செயலாளர் முருகையன் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாட்டை கிரியேட், சன் டிரஸ்ட், வேவ்ஸ் ஃபவுண்டேஷன், ஒற்றுமை அறக்கட்டளை ஆகியவை சார்பில் செய்திருந்தனர். முன்னதாக நெல் வங்கி ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
முடிவில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் நன்றி கூறினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்