சென்னை: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, அடுத்த, 2 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக் கடலில் தெற்கு மத்திய பகுதியில் மையம் கொண்டிருந்த, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது வலுவிழுந்து, தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரம் வரை பரவி உள்ளது.
இடி, மின்னலுடன் மழை : இதனால், புதுச்சேரி, தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்தது. பலமான கடற் காற்று வடகிழக்கு மற்றும் கிழக்கு திசையில் இருந்து மணிக்கு, 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் வீசக்கூடும் என, மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை நகரில் விட்டுவிட்டு மழை பெய்யக்கூடும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.