பெரம்பலூர்: மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கலெக்டர் தரேஷ் அஹமது அரசின் நிவாரண உதவித்தொகை வழங்கினார்.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் தரேஷ்அஹமது தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து, 387 மனுக்களை அளித்தனர். மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களின் மீது, விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.பின்னர் அவர் பேசியதாவது:தமிழக முதல்வர் உழவர் பாதுகாப்புதிட்டத்தின் கீழ் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுள்ள, 18 முதல், 65 வயதுக்குட்பட்ட உழவர்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக, 1,000ம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.இதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள, பத்து குறுவட்டங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், இன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, 53 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை பெற ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை பெற, புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்கள் வட்டார மருத்துவ அலுவலர்கள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.வட்டார மருத்துவ அலுவலரிடம் செல்லும்போது, நோயாளி தனது புற்றுநோய் சிகிச்சை குறித்த மருத்துவகுறிப்புகள், உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ- 2, வங்கி கணக்கு எண் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை பெறாத உழவர்கள், தங்கள் பகுதி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்புத்திட்ட, தனி தாசில்தாரை அணுக வேண்டும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆபரேஷன் செய்தவர்களுக்கு, பெரம்பலூரில் வலி நிவாரண மருத்துவ வசதி செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி விரைவில் அவர்களுக்கு வலி நிவாரண மருத்துவ வசதிகள் செய்து தரப்படும்.இதுகுறித்த விபரங்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர்கள், வேப்பந்தட்டை ஆனந்தமூர்த்தி, 93619-91616, பெரம்பலூர் வசந்தா, 94434-52717, ஆலத்தூர் மகாலட்சுமி, 99655-99706, வேப்பூர் சேசு, 98428-46614 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு, தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், பத்து பேருக்கு தலா, 4,500 ரூபாய் வீதம் மொத்தம், 45 ஆயிரம் ரூபாய் மானியத்தொகைக்கான செக்கை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.