சென்னை: தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழுவின் தலைவர், சிங்காரவேலுவின் பதவிக்காலம், நாளையுடன் முடிகிறது. தனியார் சுயநிதிப் பள்ளிகளின் கல்வி கட்டணங்களை முறைப்படுத்தி, வரவு - செலவுக்கு தகுந்தாற்போல், நியாயமான கட்டணம் நிர்ணயிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், கட்டண நிர்ணய குழுவை அமைத்து, முந்தைய அரசு நடவடிக்கை எடுத்தது. 2009ல், முதல் தலைவராக, நீதிபதி கோவிந்தராஜன் பதவி ஏற்றார். கட்டணம் நிர்ணயம் செய்ததில், சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டே, தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். 2010 நவம்பரில், நீதிபதி ரவிராஜ பாண்டியன் நியமிக்கப்பட்டார். 2011 சட்டசபை தேர்தலுக்குப் பின், அ.தி.மு.க., அரசு பதவி ஏற்ற அடுத்த மாதத்தில், ரவிராஜ பாண்டியனும், ராஜினாமா செய்தார். அ.தி.மு.க., அரசு, நீதிபதி சிங்காரவேலுவை, புதிய தலைவராக நியமித்தது. இவர், கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில் பொறுப்பேற்றார். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, குழுவிற்கு புதிய தலைவர் நியமிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், மூன்று ஆண்டுகளில், மூன்று தலைவர்கள் வந்து விட்டனர். அதன்படி, சிங்காரவேலுவின் பதவிக்காலம், நாளையுடன் முடிகிறது. இவர், பதவி ஏற்று ஒன்றரை ஆண்டு தான் ஆகிறது.
எனவே, இவரே பதவியில் தொடர்வாரா அல்லது புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா என, தெரியவில்லை. இவர் பதவி ஏற்றதில் இருந்து, பள்ளிகள் தரப்பில் இருந்து, சர்ச்சைகள் எதுவும் எழவில்லை. அதனால், இவரையே, பதவி நீட்டிப்பு செய்வதற்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.