சென்னை: தட்டச்சர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, நாளை நடக்கிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட, இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - 3 பணிகளுக்கான குரூப் - 4 தேர்வு முடிவு, அக்., 8 ல் வெளியிடப்பட்டது. இதில், தட்டச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு, நாளை காலை, 8:30 மணி முதல், பிராட்வேயில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறுகிறது. தட்டச்சர் பணிக்கு தேர்வானவர்கள், அரசு தொழில்நுட்ப கல்வித்துறை மூலம் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும். தட்டச்சர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர் விவரம், ஒவ்வொரு துறையிலும் உள்ள இனவாரியான காலிப்பணியிடம், சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ் பட்டியல் ஆகியவை, தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை உதவியாளர் பணிக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, வரும், 17ம் தேதி முதல் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.