Advertisement
வரும் 21ம் தேதி கள் விற்பனை : இயக்க தலைவர் அறிவிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சேலம் : ""வரும், 21ம் தேதி, கள் இறக்கி விற்பனை செய்யப்படும்,'' என, தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி தெரிவித்தார். நொய்யல் ஆற்றுப்பாசன விவசாயிகள் மற்றும் அணைக்கட்டுகள் பாதுகாப்பு சங்கம் நன்றி அறிவிப்பு கூட்டம், சங்கத் தலைவர் கார்த்திகேயன் தலைமையில், கரூர் மாவட்டம் பரமத்தி அருகே, தென்னிலையில் நடந்தது. கூட்டத்தில், தமிழ்நாடு கள் இயக்க சங்க ஒருங்கிணைப் பாளர் நல்லசாமி பங்கேற்று பேசியதாவது: திருப்பூர் சாயக்கழிவு நீரால் நொய்யல் ஆற்றுப்பாசன விவசாய நிலம், 20 ஆயிரம் ஏக்கர் மாசுபட்டு, பத்து ஆண்டுகளாக வறட்சியின் கோரப்பிடியில் விவசாயிகள் சிக்கி, சீரழிந்து வருகின்றனர்.
கடந்த, தி.மு.க., அரசும், தற்போதைய, அ.தி.மு.க., அரசும், விவசாயிகள் நலனில் அக்கறை கொள்ளவில்லை. விவசாயிகள் தங்களிடம் உள்ள பனைமரம் மற்றும் தென்னை மரங்களில் கள் இறக்க அனுமதி வழங்கினாலே, கோடிக்கணக்கான விவசாய குடும்பங்கள் நாள் ஒன்றுக்கு, 1,000 ரூபாய் வருமானம் ஈட்ட முடியும்.
அரசு, டாஸ்மாக் மதுக்கடையால் கள் இறக்க அனுமதி வழங்குவது இல்லை. இதனால், விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. அரசு அனுமதி வழங்கினாலும், வழங்காவிட்டாலும் வரும், 21ம் தேதி முதல், கள் இறக்கி விற்பனை செய்ய சங்கம் முடிவு செய்துள்ளது. இதில் டாஸ்மாக் மதுவை விட, கள் சிறந்த பானம் என, நிரூபிக்கும் விவசாயிக்கு, 2 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.