சென்னை:சேப்பாக்கத்தில் நடக்க இருக்கும், இந்தியா-பாக்.,கிரிக்கெட் போட்டி தொடர்பாக, போலீஸ் கமிஷனரிடம், இருநாட்டு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், வரும் 30ம் தேதி, இந்தியா-பாக்., நாடுகளுகிடையே, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. போட்டிக்கான பாதுகாப்பு தொடர்பாக, நேற்று போலீஸ் கமிஷனர் ஜார்ஜை, பாக்.,கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஷெட்டி, ரவிசுவாமி, சுராநாயக், பஞ்சாப் போலீஸ் அதிகாரி சோஹில் கான், பாதுகாப்பு இயக்குனர் ஷாகிப், ஊடக மேலாளர் நதீம் சர்வார் மற்றும் தமிழக கிரிக்கெட் வாரிய செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் சந்தித்தனர்.
நதீம் சர்வார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்தியா-பாக்., சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர்பாக, போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து மனு கொடுத்தோம். அதில், அணிகளின் வருகை, வீரர்கள் தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. போட்டிக்கு மிரட்டல் எதுவும் வரவில்லை.
இவ்வாறு நதீம் சர்வார் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.