சென்னை: ""மெகாசிட்டி உள்ளிட்ட, 500 கோடி ரூபாய் பணிகளுக்கு, இம்மாதத்திற்குள் பணி ஆணைகள் வழங்கப்பட்டு, அடுத்த மாதத்தில் பணிகள் துவங்கும்,'' என, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறினார்.
சென்னை மாநகராட்சிக்கு, பெருநகர் வளர்ச்சித் திட்டத்தில் (மெகா சிட்டி-2), சாலை பணிகளுக்கு மட்டும், 366 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டு உள்ளது. இதில், 310 கோடி ரூபாய்க்கான பணிகளுக்கு, ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது. அதுபோன்று, நகர்ப்புற சாலை அபிவிருத்தித் திட்டத்தில், 102 கோடி ரூபாயில், 106, பேருந்து செல்லும் சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன. இதுதவிர, 79 கோடி ரூபாயில், 1,100 உட்புற சாலைகளை, சிமென்ட் கான்கிரீட் கற்கள் கொண்டு சாலை அமைத்தல், 49 சாலைகளில், கிரானைட் கற்கள் கொண்டு நடைபாதைகள் மேம்படுத்தப்பட உள்ளன.
இப்பணிகள் குறித்து ஆணையர் கார்த்திகேயன் கூறியதாவது: "மெகா சிட்டி' உள்ளிட்ட, 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு பணிகளுக்கு, இந்த வாரம் ஒப்பங்கள் கோரப்பட்டு உள்ளன. இவை பரிசீலிக்கப்பட்டு, 28ம் தேதி நடக்கும் மன்றக்கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும். இம்மாத இறுதியில், பணி ஆணைகள் வழங்கப்பட்டு, அடுத்த மாத துவக்கத்தில் பணிகள் துவங்கும். "மெகா சிட்டி' பணியில் கடந்த முறை போன்று, குளறுபடிகள் ஏதும் ஏற்படாத வகையில், பணிகளை முறையாக செய்ய திட்டமிடப் பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.