சென்னை: திரையரங்கில் தகராறு செய்த, நடிகை, புவனேஸ்வரியை, மற்றொரு வழக்கில் போலீசார் கைது செய்தனர். கடந்த 26ம் தேதி, சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில், கார் நிறுத்தும் போது ஏற்பட்ட தகராறில், சேலையூர் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவருக்கும், நடிகை புவனேஸ்வரி மற்றும் அவருடன் வந்த வழக்கறிஞருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், திரையரங்கு காவலாளி மற்றும் போலீசார், தாக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக, நடிகை புவனேஸ்வரி, அவருடன் வந்த வழக்கறிஞர் மற்றும் சிலரை, நீலாங்கரை போலீசார் கைது செய்தனர். வழக்கறிஞர் ஜாமினில் வெளிவந்த நிலையில், நடிகைக்கு ஜாமின் கிடைக்காமல், ஜெயிலில் இருந்தார். இந்த நிலையில், கடந்த, 2011ம் ஆண்டு, புவனேஸ்வரி, தன்னுடைய காரை, மடிப்பாக்கம், கார்த்திகேயபுரம் பகுதியைச் சேர்ந்த, வினாயகராஜ் என்பவருக்கு, 6 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.
பணம் கொடுப்பது தொடர்பான நடைபெற்ற தகராறில், அடியாட்களை அனுப்பி, விற்ற காரை திருப்பி எடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக, மடிப்பாக்கம் போலீசார், வழக்கு பதிவு செய்திருந்தனர். நடிகை, தேடப்படும் குற்றவாளியாக இருந்தார். இந்த நிலையில், திரையரங்கு தகராறு தொடர்பாக ஜெயிலில் இருந்த புவனேஸ்வரியை, மடிப்பாக்கம் போலீசார் கைது செய்தனர். நேற்று, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடிகைக்கு, வரும், 14ம் தேதி வரை நீதிமன்றம் காவல் வழங்கப்பட்டது. மீண்டும், புழல் ஜெயிலில், புவனேஸ்வரி அடைக்கப்பட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.