பரங்கிப்பேட்டை: பாசன வாய்க்காலில் தண்ணீர் வராததால் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு செய்த நெற் பயிர்கள் கருகி வருகிறது. பாதிப்புகளுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கவலையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடகாவில் இருந்து காவிரிக்கு தண்ணீர் திறந்து விடாது, பருவ மழை பொய்த்துபோனது உள்ளிட்ட காரணங்களால் இந்தாண்டு ஜூன் மாதம் நடக்க வேண்டிய சம்பா சாகுபடி நடக்கவில்லை. இதனால் வீராணம், சேத்தியாத்தோப்பு ஆயக்கட்டு பாசன பகுதியில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டனர்.
10 ஆயிரம் ஏக்கர்
புவனகிரி, ஆயிபுரம், தச்சக்காடு, பு.முட்லூர், அரியகோஷ்டி, சேந்திரக்கிள்ளை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்திருந்தனர்.
நீலம் புயல் மழையின்போது வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் சேத்தியாத் தோப்பு ஆயக்கட்டு பாசன வாய்க்கால் வழியாக அரியகோஷ்டி வாய்க்கால், மானம்பாத்தான் வாய்க்கால் உள்ளிட்ட பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விட்டதால் பல கிராமங்களில் நேரடி நெல் விதைப்பு செய்த நிலங்களில் விவசாயிகள் நெற்பயிர்களில் களை எடுத்து, உரமிட்டு நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து இருந்தது.
தற்போது கர்நாடகாவில் இருந்து காவிரிக்கு தண்ணீர் திறக்காததால் வீராணம் ஏரிக்கு போதுமான தண்ணீர் வரவில்லை. பாசன வாய்க்காலான சேத்தியாத்தோப்பு ஆயக்கட்டு பாசன வாய்க்கால், மானம்பாத்தான் வாய்க்கால், அரியகோஷ்டி வாய்க்காலுக்கு கடந்த 20 நாட்களுக்கு மேல் தண்ணீர் திறந்து விடவில்லை.
இதனால் மானம்பாத்தான், அரியகோஷ்டி வாய்க்கால் மூலம் பாசனம் பெரும் தச்சக்காடு, வல்லம், சேந்திரக்கிள்ளை, சின்னகுமட்டி, அரியகோஷ்டி உட்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். சில வசதியான விவசாயிகள் வாய்க்காலில் வரும் குறைந்தளவு தண்ணீரை ஜெனரேட்டர் மூலம் இறைத்து ஓரளவு பயிர்களை காப்பாற்றுகின்றனர்.
கண்ணீர்
இந்தாண்டு மழையை நம்பியே பல விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் அதிகளவில் ஈடுப்பட்டனர். நீலம் புயல் மழை மற்றும் பாசன வாய்க்காலில் தாமதமாக தண்ணீர் வந்ததால் விவசாயிகள் கடன் வாங்கியும், நகையை அடமானம் வைத்தும் அடுத்தடுத்த பணிகளை செய்தனர்.
இருந்தும் பாசன வாய்க்காலில் தண்ணீர் வராததாலும், பருவ மழை பொய்த்து, நேரடி நெல் விதைப்பு செய்த நெற்பயிர்கள் கடந்த பத்து நாட்களாக கருகி வருவதால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். காய்ந்து போன நெற்பயிர்களில் ஆடு, மாடுகளை மேய்க்கவும் தயாராகி வருகின்றனர்.
நிவாரணம்
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் பெற்றுள்ள கடனை தள்ளூபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.